திரைக் கதிர்

சிம்பு மற்றும் சிவா தயாரிப்புகளில் ஆக்ஷன் அதிரடி; 'பையா' ரீ ரிலீஸ் எதிர்பார்ப்பு
திரைக் கதிர்
Published on
Updated on
1 min read

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்துக்காக சிம்பு தன்னைத் தயார்படுத்தி வருகிறார். இதற்காக பாங்காக், துபை ஆகிய நாடுகளுக்குச் சென்று, மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருவதுடன், உடலையும் கதாபாத்திரத்திற்கான தோற்றத்திற்கு தயார் செய்து வருகிறார்.

சமீபத்தில் துபையிலிருந்து சென்னை திரும்பிய அவர், மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளிய முதல் படம் என்ற பெருமை கொண்ட 'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினரைத் தன் வீட்டிற்கு வரவழைத்துப் பேசி மகிழ்ந்திருக்கிறார்.

--------------------------------------

சிவ கார்த்திகேயன் நடித்து வரும் 'அமரன்' படம், மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் என்பது தெரியும். ஆக்ஷனுக்கு முக்கியத்துவமான படமாக இது ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் சிவா நடித்துள்ளார். மேஜர் ரோலுக்காகவே தன் உடல் எடையை கூட்டி, உடம்பையும் கட்டுக்கோப்பாக்கி வைத்தார். அவரது ஜிம் ஒர்க்அவுட் வீண் போகவில்லை.

'எஸ்.கே.23' படம் அமரனை விட ஆக்ஷன் அதிகம் உள்ள படம் என்பதால், படப்பிடிப்புக்கு இடையேயும் தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

------------------------------------------

லிங்குசாமி இயக்கத்தில் 2010 - ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா, ஜெகன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். நா. முத்துக்குமாரின் வரிகளில் பட்டி தொட்டியெங்கும் பாடல்கள் ஹிட்டானது.

இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் வரும் ஏப்ரல் 11- ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இதையடுத்து பையா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார் லிங்குசாமி.

------------------------------------------

கேரளா ஷூட்டை முடித்த கையோடு இப்போது பஹ்ரைன் பறந்திருக்கிறது வெங்கட் பிரபு டீம். இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் அங்கே கிளம்பிப் போனார் விஜய். ஆனால், படத்தின் இயக்குநர், ஹீரோயின் உள்படப் பலரும் அதற்கு முன்னரே புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அங்கே சில ஆக்ஷன் சீக்குவென்ஸ்கள் படமாகப்படுகின்றன. வரும் தமிழ்ப்

புத்தாண்டு ஸ்பெஷலாக படத்தின் டீசர் துளிகள் அல்லது முதல் சிங்கிள் லிரிக் வீடியோ ஆகியவற்றில் எதாவது ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். வரும் ஏப்ரல் 14-க்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு மொத்த டீமும் சென்னை திரும்பிவிடுகிறார்கள் என்றும், தேர்தல் சமயத்தில் விஜய் சென்னையில் இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com