தமிழ்நாடும் ... யூதர்களும்...

ராமநாதபுரத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் கடற்கரை கிராமமான பெரியபட்டினத்தில் வசிக்கும் பாலு தென்னம்தோப்பில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்து அங்கிருந்த கல்லில் துணி துவைத்தார்.
கல்வெட்டு
கல்வெட்டுPicasa
Updated on
2 min read

ராமநாதபுரத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் கடற்கரை கிராமமான பெரியபட்டினத்தில் வசிக்கும் பாலு தென்னம்தோப்பில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்து அங்கிருந்த கல்லில் துணி துவைத்தார். அப்போது, 80 செ.மீ. நீளமும், 60 செ.மீ. அகலமும் அந்தக் கல்லில் புரியாத மொழியில் எழுத்துகள் உளியால் கொத்தப்பட்டிருந்ததைக் கண்டார். அவர் அளித்த தகவலின்பேரில், வரலாற்று ஆர்வலர் ஹாத்தீம் அலியும் பார்வையிட்டு, கல்வெட்டின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

இந்தப் பதிவை துபையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஜக்ரியா பார்த்ததும், கல்வெட்டின் எழுத்துகள் "ஹீப்ரு' மொழியைச் சேர்ந்தது என உறுதி செய்தார்.

இதுகுறித்து ஜக்ரியா கூறியது:

'பெரியபட்டினம் கடற்கரைப் பகுதியில் போர்ச்சுகீசியர்கள் வியாபாரம் நடத்தியதற்கான அநேக சான்றுகள் கிடைத்துள்ளன; கிடைத்தும் வருகின்றன. பல்வேறு நாடுகளுக்கு பெரியப்பட்டினத்திலிருந்து கடல் வழி வியாபாரம் நடைபெற்றதற்கு சான்றாக பழைய நாணயங்களும் கல்வெட்டுகளும் உள்ளன.

இந்தக் கல்லை ஆய்வு செய்தபோது, 122425 இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. 13 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த "நிகி மிய்யா' என்ற யூதப் பெண்ணின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு. அதில் "செலூசிட் யுகம்' 153637 என்றும் கிக்ரோபியன் காலண்டர் கி.பி. 122425 என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கடலில் கிடைக்கும் பவளப்பாறையில் வெட்டி எடுக்கப்பட்ட பாளத்தில் அந்தக் கல்லை செதுக்கி பிறகு உளி கொண்டு எழுதியிருக்கிறார்கள்.

கல்வெட்டின் முதல் வரியிலும் இரண்டாவது வரியிலும் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக எழுதப்பட்டுள்ளது. மூன்றாவது வரியில் இறந்தவரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் வரிசையில் சில எழுத்துகள் சிதைந்திருப்பதால் கல்வெட்டில் இருந்த பெயர் என்னவென முழுமையாக வாசிக்க இயலவில்லை. இதுவரை இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஹீப்ரூ கல்வெட்டுக்களில் மிகவும் பழமையான கல்வெட்டு இந்தக் கல்வெட்டுதான்'' என்கிறார் ஜக்ரியா.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசியபோது:

'அந்நிய மொழிகள் பேசிய, பிற சமயங்களைச் சேர்ந்த வணிகர்களை "அஞ்சு வண்ணத்தார்' என்று அந்தக் காலத்தில் குறிப்பிட்டுள்ளனர். கேரளத்தின் கொச்சில் 80ஆம் ஆண்டு வாக்கில் யூதர்கள் வாழ்ந்த பகுதியை "அஞ்சுவண்ணம்' என்றே அழைத்துள்ளனர். பெரியபட்டினத்தில் சைவம், வைணவம், இஸ்லாம், யூத மதத்தைச் சேர்ந்த வணிகர்கள்

நல்லிணக்கத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

பெரியபட்டினத்தில் நடத்தப்பட்ட சில அகழாய்வின்போது, ஜப்பான் டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். கி.பி., பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இன்றைய பெரியபட்டினத்தை "பராக்கிரம பட்டினம்' என்கிறது. 11ஆம் நூற்றாண்டில், "பவித்திர மாணிக்கப் பட்டினம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக திருப்புல்லாணி கோயிலில் உள்ள 1225ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்து குளிக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்ற துறைமுக நகரமான "பவித்திர மாணிக்கப் பட்டினம்' பிறகு "பராக்கிரமபட்டினமாக' பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் பெரியபட்டினமாக மாறியுள்ளது. இங்கு யூதர் கோயில் ஒன்று இருந்ததாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது யூதர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறது. ù தாடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டால் பல உண்மைகள் தெரியவரும்'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com