தேவையானவை:
மலைவாழைப்பழம், ஏலக்காய் - தலா 5
தேங்காய் சிறியது-1
சர்க்கரை- 100 கிராம்
முந்திரிப் பருப்பு- 10
நெய்- சிறிதளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழங்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்து அதனுடன் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து, சிறிது கொதித்தவுடன் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழங்களைப் போட்டு நன்றாகக் கரண்டியால் மசித்துவிட்டு இரண்டும் சேர்க்க வேண்டும்.
பின்னர் நன்றாகக் கொதிக்கும்பொழுது சிறிது கெட்டியாக வரும். அப்போது இறக்கி முந்திரிப் பருப்பைச் சிறிது நெய் விட்டு நன்றாக சிவப்பாக வறுத்துப் போட்டு ஏலக்காய்ப் பொடியையும் போட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.