பேல்பூரி

'மைநி, மச்சான், மாப்ளே..'
சித்திரிக்கப்பட்டது
சித்திரிக்கப்பட்டது
Published on
Updated on
2 min read

கண்டது

(நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக் கடைகள் சிலவற்றின் பெயர்கள்)

'மைநி, மச்சான், மாப்ளே..'

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'ஆடுமேய்த்தான்விளை.'

-கே.எல்.புனிதவதி, கோவை-17.

(திருநெல்வேலி மாவட்டத்தில் மலர்களின் பெயரால் உள்ள சில ஊர்கள்)

'ரோஸ்மியாபுரம், சுத்தமல்லி, சிவந்திப்பட்டி, மரிக்கொழுந்துப்பட்டி..'

-உ.ராமநாதன், நாகர்கோவில்.

(கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர்)

'மாடூர்'

-சங்கரி முத்தரசு, கோவை.

கேட்டது

(திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)

'என்னடா.. எப்போ பார்த்தாலும் சோகமா ஸ்டேட்டஸ் வச்சிகிட்டு இருக்கே?'

'பெண்டாட்டிகூட ஒரே சண்டைடா...?'

'அப்பாடா... எங்கே நீ சந்தோஷமா இருக்கியோன்னு நினைச்சேன்...'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

(சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)

'உங்களது சொந்த ஊர் எங்கே..?'

'எனக்கு அவ்ளோ வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு...!'

-ஏ.எஸ்.கோவிந்தராசன், சென்னை.

(கோவை காந்திபுரத்தில் இருவர்..)

'நான் ஒரு பொண்ணுகிட்ட 'ஐ லவ் யூ'ன்னு சொன்னேன்... பத்து நாள் ஜெயில் தண்டனையை அனுபவிக்க வைச்சிட்டா?'

'பரவாயில்லைடா.. நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறேன்..'

-எம்.பி.தினேஷ், கோவை- 25.

யோசிக்கிறாங்கப்பா!

நான் பேசிய பேச்சுக்கு மட்டுமே பொறுப்பாவேன்.

அதை நீ எப்படி புரிந்துகொண்டாய் என்பதற்கு நான் பொறுப்பல்ல!

-அ.யாழினி பர்வதம், சென்னை-78.

மைக்ரோ கதை

சிந்தியாவின் வீட்டில், அவளது தோழி வித்யா பேசிக் கொண்டிருந்தாள். அப்போது காஸ் சிலிண்டர் வந்தது. அதை வாங்கிக் கொண்டு, பழைய சிலிண்டரை கொடுத்து அனுப்பினாள் சிந்தியா.

அப்போது வித்யா, 'நீ கொடுத்த காலி சிலிண்டர் யாருடையது?' என்றாள். 'என்னுடையது' என்றாள் சிந்தியா.

'இப்போது டெலிவரியான சிலிண்டர் யாருடையது' என்று வித்யா மீண்டும் வினவினாள். 'அதுவும் என்னுடையதுதான்..' என்றாள் சிந்தியா.

'இரண்டுமே உன்னுடையது என்றால் ஒன்று இங்கே இருக்கிறது.. இன்னொன்று எங்கே..?' என வித்யா விதண்டாவாதம் செய்ய, பதில் தர முடியாமல் சிந்தியா தடுமாறினாள்.

-பால் ராமமூர்த்தி. பி, அம்பாசமுத்திரம்.

எஸ்எம்எஸ்

குழந்தைகளைச் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கலாம்.

செல்லாப் பிள்ளைகளாக வளர்த்துவிடக் கூடாது.

-பா.சக்திவேல், கோவை.

அப்படீங்களா!

வாட்ஸ் அஃப்பில் சாட் சேவை மிக முக்கிய சேவையாகும். இது தகவல் பரிமாற்றத்தை வேகமாகப் பயன்படுத்த உதவுகிறது. சாட் சேவையைப் பயன்படுத்துபவர்களுக்காக புதிய சேவையை வாட்ஸ் அஃப் அறிமுகம் செய்துள்ளது. யார் நமக்கு தகவலை அனுப்ப டைப் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களின் டி.பி. புகைப்படத்துடன் காண்பிப்பதுதான் புதிய சேவையாகும்.

பொதுவாக, நமக்கு யார் தகவலை டைப் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற பெயர் மட்டும்தான் இதுவரையில் தெரிவந்தது. தற்போது புகைப்படத்துடன் காண்பிக்கும். குழுவாக சாட்டுகளில் இருக்கும்போது, யார் தகவலை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் காண உதவும்.

இது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். பயன்பாட்டாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையைப் பெற வாட்ஸ் அப் புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

இதேபோல், குழு வாயிஸ் சாட்டுகளில் ஆடியோ தகவல்களைப் பதிவு செய்ய புதிய பொத்தன் அறிமுகமாகி உள்ளது. வழக்கமான ஆடியோ தகவல் பதிவு பொத்தனுக்கு பதிலாக சாட்களுக்கு அருகே இந்த புதிய பொத்தான் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வாய்ஸ் சாட்டுகளை எளிதில் பதிவு செய்து அனுப்பலாம். இதற்காக ஆண்ட்ராய்டு வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இந்த இரு சேவைகளும் பயன்பாட்டாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com