சிரி... சிரி...

'எதிரிநாட்டு மன்னன் ஒரு பயந்தாங்கொள்ளின்னு எப்படி சொல்றீங்க அமைச்சரே..?''தூது புறாவிடம் ஓலையுடன் பக்கெட் பிரியாணி கொடுத்து அனுப்பியுள்ளான் மன்னா...'
சிரி... சிரி...

'எதிரிநாட்டு மன்னன் ஒரு பயந்தாங்கொள்ளின்னு எப்படி சொல்றீங்க அமைச்சரே..?'
'தூது புறாவிடம் ஓலையுடன் பக்கெட் பிரியாணி கொடுத்து அனுப்பியுள்ளான் மன்னா...'

-பி.மோகன்ராஜு,
சென்னை-78.

'ஏம்பா..  பிச்சை எடுக்கறீயே.. அளவுக்கு மேலே சாப்பாடு கிடைச்சா என்ன செய்வே..'
'வேறென்ன தாயி. பொட்டலம் போட்டு பிளாட்பாரத்துல வெச்சி, காசாக்கிடுவேன் மகராசி...'




'மச்சான்... வெள்ளையாக இருப்பதை  எல்லாம் டாக்டர் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டார்...'
'சரிடா.. அது சரி.. மாத்திரை வெள்ளையா இருக்கேன்னு கேட்க வேண்டியதுதானே..'

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

'ராப்பிச்சை.. கொஞ்சம் பொறு.. இதோ வந்துடறேன்...'
'எது போட்டாலும் ஓவனில் கொஞ்சம் சூடு பண்ணி கொண்டா தாயீ...'



'ஹலோ உணவுப் பாதுகாப்பு அதிகாரியா.. இங்கே போன வாரம் வைச்ச கோழிக் குழம்பை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஊத்துறாங்க..?'
'எந்த ஹோட்டலில்...'
'ஹோட்டல் இல்லைங்க.. இது வீடு..'

-ப.சோமசுந்தரம்,
சென்னை.

'நம் மன்னருக்கு என்ன பலகாரம் ரொம்ப பிடிக்கும்...'
'குழி பணியாரம்தான்...'



'சார்.. உப்பு வாங்க நான் அரை கிலோ மீட்டர் நடந்து போய்ட்டு வந்தேன்...'
'எல்லோரும் சுகருக்குதானே நடப்பாங்க.. நீங்க ஏன் உப்புக்கு நடக்கறீங்க..?'



'பொண்ணுக்கு சமையல் தெரியுமா?'
'என்ன அப்படி கேட்டுட்டிங்க.. போனிலே பண்ணிடுவா..?'

-வி.சாரதி டேச்சு,  
சென்னை.

'பொண்ணு ரொம்ப ஒல்லியே இருக்கேன்னுதான் யோசிக்கிறேன்.. தரகரே..'
'உங்க கை சமையலில் ஆறே மாசத்துல நல்லா உப்பிடும் தம்பி....'



 

'சாம்பார் வாளியை சர்வர் இங்கே வச்சிட்டு போயிட்டாரே..'
'ஒரு வேளை டிப்ஸ் அதிகமாக எதிர்பார்க்கிறாரோ என்னவோ...'



 

'என்னது முடி வளர குதிரைக் கொம்பு லேகியமா... அது எங்கே கிடைக்கும்பா குடுகுடுப்பை...'
'என்னைத் தவிர யாரிடமும் கிடைக்காது சாமி. பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்...'


 

'வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை நல்லா வளருமுன்னு டாக்டர் சொல்லியிருக்காருடா...?'
'நீ சாப்பிட்டது வெண்டைக்காய் இல்லைடா.. வெள்ளரி பிஞ்சு...'

-வி.ரேவதி,
தஞ்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com