திரைக் கதிர்

தமிழில் கதாநாயகிகளை மையப்படுத்தும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, இப்போது மலையாளம், ஹிந்தி என மற்ற படவுலகிலும் அசத்திவருகிறார்.
திரைக் கதிர்
Published on
Updated on
1 min read

தமிழில் கதாநாயகிகளை மையப்படுத்தும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, இப்போது மலையாளம், ஹிந்தி என மற்ற படவுலகிலும் அசத்திவருகிறார். சூர்யா - ஜோதிகாவின் குழந்தைகள் மும்பையில் படித்து வருவதால், படப்பிடிப்பும் மும்பையிலேயே இருக்கும் என்பதால் ஹிந்திப் படங்களுக்கு ஓகே சொல்லிவிடுகிறார். திருமணத்திற்குப் பிறகு தமிழில் ஜோதிகா நடித்த படங்கள் பெரும்பாலும் ஹீரோயின் சென்ட்ரிக் ஆகும். எனவே, கதாநாயகிக்கான படங்களை கமிட் செய்தால், படப்பிடிப்பிற்காக அவர் சென்னையில் பல மாதங்கள் செலவிட நேரிடும் என்பதால், குழந்தைகளின் படிப்பைக் கருத்தில் கொண்டு அதிக நாள்கள் கால்ஷீட் ஆகும் படங்களைத் தற்போது தவிர்த்து வருகிறார். அதனால்தான் தமிழில் இன்னமும் படங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் என்கிறார்கள்.

---------------------

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் "விடாமுயற்சி.' படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடித்து வருகிறார். படத்தில் அவர் தவிர, அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கஸன்ட்ரா எனப் பலரும் நடித்து வருகின்றனர். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த கலவையாக படம் உருவாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் சென்னை திரும்பிய படக்குழு, சில நாள்களுக்கு முன்னர்தான் அஜர்பைஜான் சென்றடைந்தது. அங்கே பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது என்றும், வின்டர் சீசன் என்பதாலும் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அஜர்பைஜானில் உள்ள ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு கிடையாது என்பதால், படப்பிடிப்பை புதியதொரு இடத்தில் மாற்றியுள்ளனர்.

---------------------

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு, படமாகத் தயாராகிறது என்றும், அதனை "தூங்காவனம்', "கடாரம் கொண்டான்' ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார் என்றும், கமல்ஹாசன் இதைத் தயாரிக்க, வேலு நாச்சியாராக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போரிட்டவர் வேலுநாச்சியார் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், அறிமுக நடிகை ஆயிஷா வேலு நாச்சியாராக நடிக்கிறார், "ஊமை விழிகள்' ஆர்.அரவிந்த்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார் என்றும் அறிவிப்பு வெளியானது நினைவிருக்கலாம். ஒரே கதை இரண்டு விதமாக படமாகவுள்ளதாக தெரிகிறது.

---------------------

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சில்வர் ஜூப்ளி ஹிட்ஸ் கொடுத்தவர் மோகன். "மெல்லத் திறந்தது கதவு', "பயணங்கள் முடிவதில்லை', "உதயகீதம்', "தென்றலே என்னைத் தொடு' எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அந்தப் படத்தின் பாடல்கள் இன்னமும் பலரின் ஃபேவரைட்டாக உள்ளன. கடந்த 2008-இல் "சுட்டபழம்' படத்தில் நடித்த மோகன், அதன்பின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு "தாதா' படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ சொன்ன கதை அவருக்குப் பிடித்துப் போக, "ஹரா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com