நிம்மதியான வாழ்க்கை வாழ!

பெரும்பாலானோர் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று புலம்புவர்.  பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவர். இவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ சில ஆலோசனைகள்:
நிம்மதியான வாழ்க்கை வாழ!

பெரும்பாலானோர் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று புலம்புவர்.  பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவர். இவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ சில ஆலோசனைகள்:

உடல் உழைப்பை சற்று அதிகப்படுத்த வேண்டும்.

அதிக நேரம் டி.வி,  செல்போன் பார்த்துகொண்டிருந்தாலும் பிரச்னைதான். அவை மூளையை அமைதியாகவிடாமல்  தடுக்கும்.

வயிறுமுட்ட இரவு நேரத்தில் அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிக காரம் உள்ள உணவுகளை எடுத்துகொண்டாலோ,  செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவகளை உண்டாக்கி, தூக்கத்தைப் பாதிக்கும். 

மனஅழுத்தம், மன உளைச்சலுடன் இருந்தாலும் தூக்கம் வராது.

பெரிய நோய்கள், வலிகள் உள்ளவர்களுக்கு தூக்கம் அவ்வளவு எளிதில் வராது. 

ஆஸ்துமா, சளி பிரச்னைகள் இருந்தாலும் தூக்கம் வராது.

பொதுவாக, 30 வயதுக்கு மேல் உள்ள ஆண்,  பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை இருக்கிறது.  இதற்கு மனஅழுத்தம், மனதில் சஞ்சலங்கள், வீட்டில் சச்சரவுகள் எண்ணங்களின் போராட்டம் இதனால் தூக்கம் வராது. 

பெரும்பாலோருக்கு முதுமையில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளில் முதலிடத்தை தூக்கமின்மை பிடிக்கிறது. ஐந்து மணி நேரத் தூக்கம்கூட அறுபது வயதுக்கு போதுமானதாகும். ஆனால், தூங்கும் நேரத்தின் அளவைவிட ஒருவர் எவ்வளவு நேரம் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தை பெறுகிறார் என்பது அவசியம். உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே  புதுப்பித்து கொள்வதற்கு , தூக்கம் ஓர் இயற்கையான வழி. ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொருத்து தூக்கம் அமைகிறது.

தினமும் ஒருவருக்கு பொதுவாக ஆறு முதல் எட்டு மணி வரை தூக்கம் அவசியமாகும். தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இள வயதில் தேவையான அளவுக்கு தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வருவதோடு, தேவையில்லாமல் கோபம் உண்டாகும்.

ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெட்டால் பசி குறையும். அஜீரணம் ஏற்படும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். அடுக்கு கொட்டாவி வரும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

முதுமையில் பெரும்பாலானவர்களுக்குத் தனிமை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 'வயதாகிவிட்டது, இனி உடற்பயிற்சி தேவையில்லை' என நினைத்து முதுமையில் பலரும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது தூக்கமின்மைக்குப் பாதை வகுக்கிறது. தூக்கப் பிரச்சினை உள்ளவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். 

தினமும் காலை, அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

இரவு உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மதியம் 5 மணிக்கு மேல் டீ, காபி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக இரவில் டிவி, மொபைல் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இரவு தூங்கச் செல்வதற்கு 2 மணிநேரத்துக்கு முன்பாகவே லேசான உணவு வகைகளை எடுத்துகொள்ள வேண்டும்.

நல்ல வாழ்வியல் முறை என்பது நாம் வகுத்து கொள்வதே. தூக்கத்தின் அவசியத்தை உணர்ந்து யோகா, தியானம், நடைப்பயிற்சி போன்ற, வாழ்வியலை சிறப்பாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால், ஆழ்ந்த உறக்கம் சாத்தியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com