கவனம் ஈர்த்த சினிமாக்கள் - 2023

தமிழ் சினிமாவின் நிறம், சமீபகாலமாக மாறத் தொடங்கியிருக்கிறது.
கவனம் ஈர்த்த சினிமாக்கள் - 2023

தமிழ் சினிமாவின் நிறம், சமீபகாலமாக மாறத் தொடங்கியிருக்கிறது. பகட்டான ஜிகினா பொய்களும் அதிகார மிடுக்குகளும் நிறைந்த சினிமாக்கள் மக்களின் வாழ்க்கையை அதன் பிரச்னைகளுடன் சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறது. மனித வாழ்க்கையை 2023-ஆம் ஆண்டில் பேசிய சினிமாக்கள்:

போர் தொழில்

அனைவராலும் பாராட்டை பெற்ற 'போர் தொழில்', 2023- ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று. சஸ்பென்ஸ் ட்விஸ்ட் த்ரில்லர் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்த இந்தப் படமானது இரு காவல் அதிகாரிகளின் பார்வையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. திருச்சியில் ஒரு தொடர் கொலையாளியின் பாதையில் இருக்கும் ஒரு புதிய அதிகாரி (அசோக் செல்வன்) , மூத்த அதிகாரி (சரத்குமார்) ஆகியோர் கொலையாளியை பிடிக்க எடுக்கும் முயற்சிதான் இந்த படம். இயக்குநர் விக்னேஷ் ராஜா சிறப்பாக இயக்கியிருந்தார்.

ஜிகர்தண்டா 2

தீபாவளி தினத்தில் வெளியான 'ஜிகர்தண்டா 2' மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் , நம்பிக்கைக்குரிய இயக்குநர்களில் ஒருவராக தனது நிலையை மீட்டெடுத்துள்ளார். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன்ஸால் ஈர்க்கப்பட்டு, கார்த்திக் தனக்கென தனி பாணியை அமைத்து, 'பாண்டியா வெஸ்டர்ன்' என்று புது வகையை உருவாக்கியுள்ளார். படம் நிறைய திருப்பங்களை எடுத்துகொண்டாலும், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் சிறப்பான, அபாரமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக படத்தின் இறுதியில் காடுகளின் பாதுகாப்பை உணர்த்துவது சிறப்பு.

விடுதலை பகுதி 1

வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான 'விடுதலை பாகம் 1', தீவிரவாதி வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிக்க போலீஸ் முகாம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்படும் ஒரு தொலைதூர பழங்குடி கிராமத்தைப் பற்றிய கதை. புதியதாக நியமிக்கப்பட்ட காவலரின் பார்வையில் இந்தக் கதை செல்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஒரு அரிய இனம் - விடுதலை ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்களைப் பற்றியது.

குட் நைட்

ஒரு படம் வெற்றியடைய எப்போதும் ஆக்ஷன் ஹீரோ, மிகப் பெரிய பட்ஜெட், மிகையான ஆக்ஷன் காட்சிகள் தேவையில்லை என்பதை நிரூபித்தது படம்தான் 'குட் நைட்'. விநாயக் சந்திரசேகரன் இயக்கிய 'குட் நைட்' திரைப்படம் பிளாக்பஸ்டர்ஹிட் இல்லை என்றாலும், ஒரு அற்புதமான பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக் கதையாக மாறியது.

குறட்டைப் பிரச்னையால் அவதிப்படும் கதாநாயகன் தன் திருமணத்தையே ஆபத்தில் ஆழ்த்தும் கதை சுவாரஸ்யமாக இருந்தது. மணிகண்டன், மீத்தா ரகுநாத் ஆகியோரின் சிறப்பான நடிப்பால், சினிமாவில் 'சூப்பர் ஸ்டார்கள்' என்பதை விட வேறு பல விஷயங்கள் உள்ளன என்பதை நிரூபித்தவர் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.

டாடா

'டாடா' கடந்த ஆண்டு வெற்றியை ஈட்டிய மற்றொரு சிறிய படம். குடிப் பழக்கத்துக்கு அடிமையான ஒரு தந்தை தன் மகனைக் கவனித்துக் கொள்வது, தன்னை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொள்வது பற்றிய நகரும் ஒரு கதை. இயக்குநர் கணேஷ் கே பாபு படத்தை சிறப்பாக இயக்கிருந்தார். கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோரின் மிகச் சிறப்பான நடிப்பால், படம் இறுதியில் ஒரு உணர்ச்சி மிகுந்த தருணத்தில் முடிந்திருக்கும்.

மாமன்னன்

மாரி செல்வராஜின் சிறந்த படமாக இல்லை. இருந்தாலும், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' இந்த பட்டியலில் இடம் பெற தகுதியானது. சாதிய பாகுபாடுகளை அடித்து நொறுக்குகிற கதை. சாதி எதிர்ப்புக் கட்சிக்குள் இருக்கும் சாதி அரசியலை ஆராயும் முதல் படமாக இருக்கலாம். வடிவேல் நாயகனாக, ஒரு தலித் அரசியல்வாதியாக ஒரு நம்பிக்கையான கதையில் தனித்து நிற்கிறார்.

மாவீரன்

சினிமாவுக்கு அதன் அசல் சூப்பர் ஹீரோவை கொடுத்த படம் என்று சொல்லலாம். ஒரு கோழை கார்ட்டூனிஸ்ட்டுக்கு (சிவகார்த்திகேயன்) கேட்கும் ஒரு குரல் அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றுகிறது. அடுத்து நடக்கும் விஷயங்கள் குறித்து குரல் முன்பே கூறிவிடுவதால், இது சத்யாவை வெல்ல முடியாத போராளியாக மாற்றுகிறது. மண்டேலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஷ்வின் 'மாவீரன்' படத்திலும் சிந்தனையை நிரூபிப்பவராகவும் இருக்கிறார்.

சித்தா

மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் 'சித்தா'. இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் இயக்கிய இந்தப் படம், பெடோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவருக்கு ஒருவர் எடுக்க வேண்டிய உதவியைப் பற்றி கூறுகிறது. இது குற்றவாளிகளைத் தண்டிப்பதில் இருந்து நமது கவனத்தை நீக்கி காயம்பட்டவர்களை நோக்கி செலுத்துகிறது. சித்தார்த் இந்த அற்புதமாக கதைக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளார். இத்திரைப்படம் ஒரு அற்புதமான உணர்ச்சிகரமான திரைக்கதையின் இதயத்தையும் கொண்டுள்ளது.

பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் தனது மகத்தான படைப்பின் இரண்டாம் பாகத்தில் மூலக் கதையில் இருந்து முற்றிலும் விலகி எடுத்த படம் என்ற விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் 'பொன்னியின் செல்வன் 2' வரவேற்பைப் பெற்றது. காவியக் கதையின் முடிவு துண்டு துண்டான திரைக்கதை, தகவல் சுமை போன்ற பல குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும், இயக்குநரின் பார்வைக்கு சில தளர்வுகளைக் குறைக்க வேண்டும். அனைத்து கேரக்டர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக முடிக்க வேண்டும் என்று நிர்பந்தத்தில் எடுத்து போல் இருந்தது. தமிழில் எதிர்கால இலக்கியத் தழுவல்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன.

கூழாங்கல்

திரைப்படம் அதன் விழாவை முடித்து, ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் அதிக பாராட்டுகளை வென்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றாலும், கடந்த ஆண்டுதான் திரையரங்கில் வெளியிடப்பட்டது. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம், கோபமடைந்த ஒருவன் தன் மனைவியைத் தேடி, அவனது மகனுடன் நீண்ட தூரம் நடப்பதைப் பற்றிய திரைப்படமாகும். கூழாங்கல் 2023 -இன் சிறந்த திரைப்படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படமாக வரலாற்றில் இடம்பிடிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com