சர்வதேச திரைப்பட விழா

சென்னை தாகூர் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில், திரையிடப்பட்ட அயல்மொழிப் படங்களில் மனதில் பதிந்தவை
சர்வதேச திரைப்பட விழா
Published on
Updated on
1 min read

சென்னை தாகூர் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில், திரையிடப்பட்ட அயல்மொழிப் படங்களில் மனதில் பதிந்தவை:

கிளாஸ் மை அன்ஃபுல் ஃபில்டு லைஃப்

நெதர்லாந்து நாட்டில் படமாக்கப்பட்ட 94 நிமிடங்கள் கொண்ட படம். ரோஜியர் கேப்பர்ஸ் என்பவர் எழுதி இயக்கியது. தன் வாழ்க்கைக் கதையை தானே எழுதிப் படமாக்கி இருக்கிறார்.

ஐம்பது வயதுள்ள ரோஜியர் ஒரு புதுவிதமான இசைக் கருவியைக் கண்டுபிடிக்கிறார். ஒருநாள் மதுக்கோப்பை ஒன்றின் மேற்புறத்தைக் கைகளால் தடவும்போது, ஒரு புதுவித இசை ஒலி எழுவதைக் கண்டறிகிறார்.

இருபது மதுக்கோப்பைகளை அணிவகுக்கச் செய்து இரண்டு கைவிரல்களாலும் அவற்றைத் தடவி இனிய இசை ஒலிகள் எழுப்பிப் பாடல் இசைக்கிறார் (நம்ம ஊர் ஜலதரங்கம் போல்தான்). இந்தப் புதிய இசைக் கச்சேரியை தெருவோரங்களில் மேடைகளை அமைத்து அரங்கேற்றுகிறார்.

தெருவில் போவோர், வருவோர் பார்த்துவிட்டுப் பணம் அன்பளிப்பாகத் தருகிறார்கள். நாளடைவில் அவருடைய புகழ் பரவுகிறது. சர்வதேச இசை அரங்குகளில் பல நாடுகளில் இருந்து அழைப்புகள் குவிகின்றன.

இசை விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளும் பரிசுகளும் பெறுகிறார். தொடர்ந்து வாசித்து வாசித்துக் கைகளில் வலி வந்து விடுகிறது. மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்துகொண்ட பின் மீண்டும் இசைப் பயணங்கள் தொடர்கின்றன. காதில் தேன் பாய்ச்சும் இனிய இசைப் பாடல்கள் நிறைந்த படம்.

சினி கொரில்லாஸ்

படம் 93 நிமிடங்கள் கொண்டதுதான். மிலா குராஜ்லிக் இயக்கத்தில் உருவானது. அல்ஜீரியா நாடு சுதந்திரம் அடைய ஆறு ஆண்டுகள் போராடியது. போர் மேகங்கள் சூழ்ந்திருந்த அந்தத் தருணங்களை லாபுடோவிக் எனும் பத்திரிகையாளர் பதிவு செய்கிறார். துயரம் மிகுந்த அந்த நாள்களின்ஆவணப் படங்களாக அந்தப் பதிவுகள் நிலைக்கின்றன. அல்ஜீரியா நாடு சுதந்திரம் அடைந்தவுடன் முதியவரான லாபுடோவிக் பெரிய அளவில் கௌரவிக்கப்படுகிறார். தனி ஒரு மனிதனின் பெருமுயற்சிகள் பாராட்டப்படுகின்றன.

பில்லியும் மோலியும்

இந்த அமெரிக்கப் படம் சார்லி ஹேமில்டன் ஜேம்ஸ் இயக்கியது. 77 நிமிடங்கள் ஓடும் படம். ஒரு நீர் ராய்க்கும் மனிதனுக்கும் ஏற்படும் பாசப் பிணைப்பைச் சொல்லும் படம். பில்லி என்பவர்தான் உயிர் நேசர். கடல்வாழ் உயிரினங்களிடம் பாசம் மிக்கவர்.

அநாதையாக்கப்பட்ட ஒரு நீர்நாய் கடலில் இருந்து கரை ஒதுங்குகிறது. அதைப் பரிவுடன் பராமரிக்கிறார் பில்லி. அந்த ஜீவனுக்கு மோலி என்று பெயரிடுகிறார். உடல் நன்றாகத் தேறி வந்ததும் அந்த நீர்நாய் மோலி கடலுக்குச் செல்கிறது. மோலியை நீண்டகாலம் காணாமல் பில்லி தவித்துப் போகிறார்.

பல மாதங்கள் கழித்து மோலி கடலில் இருந்து கரைக்கு வருகிறது. பில்லியின் காலடிக்கு வந்து கொஞ்சும் மோலி இப்போது கர்ப்பமாக இருப்பதைக் காண்கிறார். குட்டி போடுகிறது மோலி.தாயைப் போலவே குட்டியும் கொள்ளை அழகு. மோலியை தன்வீட்டுக் குழந்தையாகப் பராமரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com