ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இனிப்பான லேகிய மருந்துகள் உள்ளதா?

இயற்கை மருத்துவம்: இனிப்புடன் சுகாதாரம் அளிக்கும் லேகிய பானங்கள்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இனிப்பான லேகிய மருந்துகள் உள்ளதா?

எனக்கு அறுபத்தொரு வயதாகிறது. சர்க்கரை உபாதையால் பல ஆண்டுகளாகப் பாதிப்படைந்துள்ளேன். ஆஸ்துமா உபாதையும் எனக்கு உள்ளது. தற்சமயம் எனக்கு கால்முட்டி, கணுக்கால் பகுதிகளிலும், முட்டிக்குக் கீழ்ப் பகுதிகள் பாதம் வரை வீக்கமும், வலியும் ஏற்பட்டுள்ளது. எனக்கு கசப்பு மருந்து பிடிக்காது. ஏதேனும் இனிப்பான ஆனால் சர்க்கரை அதிகமாக்காத லேகிய மருந்துகள் உள்ளதா?

-நவநீதகிருஷ்ணன்,ஈரோடு.

பத்து மூலிகை வேர்கள் சேரக் கூடிய தசமூலம் எனும் மருந்தில் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, 2.56 லிட்டர் கஷாயத்தைத் தயாரித்து அதில் நூறு கடுக்காய் சேர்த்து நான்கு கிலோ வெல்லமும் கலந்து காய்ச்சுவார்கள். ஒரு லேகிய பதத்துக்கு இது வந்தவுடன், வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதில் 160 கிராம், திரிகடு எனும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்துச் சேர்த்து ஏலம், லவங்கம், பச்சிலை ஆகியவற்றை மொத்தமாக 80 கிராம் கலந்து நன்கு கிளறி விடுவார்கள்.

இந்த லேகிய மருந்து நன்றாகக் குளிர்ந்ததும் அதில் 320 மில்லி தேன்விட்டு, 20 கிராம் யவ்க்ஷôரம் எனும் பொடியையும் கலந்து நன்றாகக் கிளறி பத்திரப்படுத்துவார்கள். இந்த லேகிய மருந்திலிருந்து ஒரு கடுக்காயை மட்டும் மென்று தின்ற பிறகு, லேகிய மருந்தை சுமார் 20 கிராம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் நாம் அடையும் நற்பயன்கள்.

நாள்பட்ட உடல்வீக்கம் வற்றிவிடும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு அருமருந்து.

காய்ச்சல், ருசியின்மை குணமாகும்.

சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

வயிற்றில் குல்மம் எனும் வாயு பந்து போல சுருண்டு கொண்டு ஏற்படுத்தும் உபாதை குணம்.

திரிதோஷங்களாகிய வாத, பித்த, கபங்களால் ஏற்படும் மண்ணீரல் வீக்கம், ஜலோதரம் எனும் வயிற்றில் நீர் சேர்ந்து கட்டிக் கொள்ளும் உபாதை குணப்படுதல்.

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவதால் ஏற்படும் சோகை நோய் மாறி உடல் ஆரோக்கியம் மேம்படுதல்.

காரணம் புரியாத உடல் இளைப்பு உபாதையிலிருந்து மீளுதல்.

பூட்டுகளில் வலியுடன் வீக்கமும் ஏற்பட்டு அசைக்க முடியாத நிலை மாறுதல்.

ரத்தம் சார்ந்த உபாதைகளை மாற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்துதல்.

'அம்லபித்தம்' எனும் புளிப்பும் ஏப்பமும் சேர்ந்து எரிச்சலுடன் உணவுக் குழாயில் கீழிருந்து மேலெழுதல் எனும் உபாதையை மாற்றி குணமடையச் செய்தல்.

தோலில் ஏற்படும் நிறமாற்றங்களை சரிசெய்து தருதல்.

சிறுநீரகங்களில் தொற்று உபாதையால் ஏற்படும் சிறுநீர் உபாதைதள் மாறுதல்.

குடல் சார்ந்த வாயுவின் ஓட்டத்தைச் சீராக்குதல்.

ஆண்களின் விந்தணுக் குறைபாடுகளைக் களைதல்.

இந்த லேகிய மருந்தைச் சாப்பிடுவதற்கும் பசி நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மேற்குறிப்பிட்ட பயன்களை நாம் அடையலாம். அதனால் ஆயுர்வேத மருத்துவர்கள் உங்களுடைய பசியை சீராக்கிய பிறகே இந்த மருந்தை அளிப்பார்கள் என்பதை ஆயுர்வேதம் நினைவூட்டுகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com