ஓய்வு பெற்றவர்களுக்கு தனி ஊர்!

முதுமையிலும் மகிழ்ச்சியுடன்: 'கேனாக் மில்' ஊரின் உருவாக்கம்
ஓய்வு பெற்றவர்களுக்கு தனி ஊர்!
Picasa

பிரிட்டனில் ஓய்வு பெற்றவர்கள் ஒருங்கிணைத்து தங்களுக்கு என்று ஒரு ஊரையே உருவாக்கியிருக்கின்றனர்.

ஆன் தோர்ன் என்ற கட்டடக் கலைஞர்தான் ஒத்த கருத்துடைய தனது நண்பர்களுடன் இணைந்து இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு குடியிருப்பை அமைத்து, 'கேனாக் மில்' என்ற பெயரையும் சூட்டினார். இது சமூக ஊடகங்களில் வைரலானது.

அவர் கூறியதாவது:

'லண்டனில் வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது. வாழ்க்கையில் நிம்மதி இல்லை. பணியிலிருந்து ஓய்வுப் பெற்றதும் நண்பர்கள் அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிடுகின்றனர். அதனால் பலர் பேச்சுத் துணை இன்றி சோர்ந்து போய் தனியே விடப்பட்டதுபோன்று உணருகிறார்கள்.

நகர வாழ்க்கையிலிருந்து விலகி, அமைதியாகவும், நிம்மதியாகவும் நண்பர்களுடன் சேர்ந்து வாழ புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள விரும்புவர்களுக்காக 'கேனாக் மில்' ஊரை உருவாக்கினேன். நண்பர்களையும் இணைத்துக் கொண்டேன். இந்த ஊரை உருவாக்க 13 ஆண்டுகள் தேவைப்பட்டன.

இந்த ஊரில் வசிப்பவர்கள், வாரத்தில் நான்கு நாள்களில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சமைக்கிறார்கள். ஓரிடத்தில் அமர்ந்து பேசி மகிழ்கிறார்கள். தங்களுக்குத் தெரிந்த கலையை பிறருக்கு கட்டணம் பெற்றுக் கொள்ளாமல் சொல்லித் தருகின்றனர். இந்த நாள்களில் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம்தான்!

தேனீ வளர்ப்பதும், மண்பாண்டங்கள் செய்வதும் இங்கு வசிப்பவர்களின் பொழுதுபோக்கு. ஒருவருக்கு ஒருவர் துணை என்று வாழ்வதை கரோனா காலத்தில் கற்றுக் கொண்டோம். அப்போதுதான் கூடி வாழ்வதில் உள்ள மகத்துவம் எங்களுக்குப் புரிந்தது' என்கிறார் ஆன் தோர்ன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com