சிரி... சிரி...

சாப்பாட்டு கலாட்டா: சமையல் குறிப்புகளும் வேடிக்கை சம்பவங்களும்
சிரி... சிரி...

என்ன சர்வர்.. சாப்பாட்டுல ரப்பர் வாசனை வருது..''

'சமையல் மாஸ்டர் யூ டியூப்பில் பார்த்து பார்த்து செஞ்சது சார்..''

இந்து குமரப்பன், விழுப்புரம்.



'நீங்க வெற்றிலை போடுவீங்களா?''

'தட்டுல இருக்கிற வெற்றிலையை எதுக்கு எடுத்து கீழே போடணும்...''

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.



'கோயிலில் அன்னதானம் வாங்குறவங்க எதுக்கு செல்போனை எடுத்து காட்டுறாங்க...?''

'ஓ.டி.பி. நம்பர் வாங்கிட்டு, அன்னதானம் தர்றாங்களாம்.. அதுக்குதான்..''

பண்ருட்டி பரமசிவம்



'டிபன்தான் சாப்பிட்டிங்களே ஏன் இன்னும் உட்கார்ந்திருக்கீங்கள்..?''

'மாவாட்டறதுக்கு முன்னாடி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்..''



'என்ன டீ தூள் போடாம டீ போடறீங்க?''

'நீங்கதானே உங்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருக்குன்னு சொல்றீங்க?''

வி.சாரதி டேச்சு, சென்னை.

'இதோ பாரு.. வீட்டுல ஹோட்டல் செலவு அதிகமாகுது. இதை பாதியா குறைக்கணும் சரியா?''

'சரிங்க.. இனி நான் மட்டும் ஹோட்டலுக்கு போய் சாப்பிடுறேன்..''



'நம்ம வீட்டுக்கு எங்க மேனேஜரை சாப்பிட கூப்பிட்டிருந்தேன்..''

'என்ன திடீர்னு..''

'தினமும் சாப்பிடும்போது அவர் மனைவியோட சாப்பாட்டை குறை சொல்றாரு.. அதான்..''

ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.



'ஆன்டி... தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், எண்ணெய்.. எல்லாம் கொஞ்சம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க எங்க மம்மி..''

'நானே தாளிச்சு கொடுத்துடறேன்... எடுத்திட்டுபோ ராஜா...''



'பூரி என்னப்பா சப்பையா இருக்கு..''

'எவ்வளவு நாளைக்குதான் சார் உப்பலாவே இருக்கும்..''



'கூட்டத்துக்கு வந்தவளுக்கு டீ, காப்பிக்கு மோர் கொடுத்தது தப்பா போச்சு...''

'சாப்பிட்டவங்களே மறுபடியும், மறுபடியும் 'ஒன்ஸ் மோர்' கேக்கறாங்க..?''



'கல்யாணத்துல ஓ.சி. சாப்பாடு சாப்பிட போனவர் எப்படி மாட்டிக்கிட்டாரு...?''

'சந்தேகப்பட்டு அவரை பொண்ணு வீடா, பிள்ளை வீடான்னு கேட்டப்ப அது கலப்புத்

திருமணமுன்னு தெரியாம ரெண்டு பேருக்கும் சொந்தமுன்னு சொல்லிட்டான்..''



'என்னப்பா.. பொங்கலில் கல் இருக்கு...?''

'கல் இல்லாட்டி அது, 'பொங்' ஆயிடுமே சார்...''

வி.ரேவதி, தஞ்சாவூர்.



'டிபன் சாப்பிட என்னை கூப்பிடாம ஹோட்டலுக்கு போறாரே என்ன செய்ய..?''

'அவருக்கு எதிரா கண்டன தீர்மானம் போடு...''



'அடுத்து என்ன வேண்டும்.. ஸ்டிராங் காப்பியா..?''

'ஸ்டிராங் சாம்பார் வடை...''

பர்வதவர்த்தினி, பம்மல்.



'தோசை, ஊத்தப்பம், நெய் ரோஸ்ட், ஆனியன் ரோஸ்ட்... என்ன சார் போடச் சொல்ல...?''

'முதலில் உங்க மாஸ்டரை சட்டையைப் போடச் சொல்லுங்க...?''

ச.அரசமதி, தேனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com