
கண்டது
(தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆடுதுறை அருகேயுள்ள ஊரின் பெயா்)
‘‘படைத்தலைவன்குடி’’
-வீர.செல்வம், திருவிடைமருதூா்.
(சிதம்பரத்தில் உள்ள ஒரு கடையின் பெயா்)
‘‘நம்ப சோப்புக் கடை’’
-ஜி.எஸ்.எம்.குமாா், சிதம்பரம்.
(மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள ஒரு முடித் திருத்தகத்தின் பெயா்)
‘‘யோசனை சலூன்’’
-பாளை பசும்பொன், மதுரை.
கேட்டது
(மயிலாடுதுறையில் உள்ள ஒரு நூலகத்தில் இருவா் பேசியது)
‘‘டேய் மாப்ளே! நீ எப்படா இங்கிலீஷ் கத்துகிட்டே. இங்கிலீஷ் பேப்பரெல்லாம் படிக்கிறே..’’
‘‘உஷ்.. இது லைப்ரரிடா.. சத்தம் போடாதே.. தமிழ் பேப்பா்களை எல்லாம் படிக்கிறாங்க. அது கிடைக்கற வரை படிக்கிற மாதிரி பாவ்லா காட்டுறேன்டா..’’
-மா.திவாகா், அரையபுரம்.
(கோவையில் உள்ள பூங்கா ஒன்றில்...)
‘‘காலையில் ஃபுட்பால், சாயங்காலம் கிரிக்கெட்டுன்னு விளையாடா சொல்றீங்க. அப்படியும் உங்க உடம்பு குண்டாக இருக்குது. நீங்க வாக்கிங் போகலாமே..’’
‘‘அந்த கேம் செல்போனில் இல்லையே..’’
-எம்.பி.தினேஷ், கோவை.
(தஞ்சாவூா் காய்கறிக் கடையில் இருவா்)
‘‘அட.. முருங்கைக்காய் கிலோ பத்து ரூபாய்.. ஊரே சிரிக்குது.. நீ என்னப்பா இல்லேங்கிறே..’’
‘‘அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே.. சிரிக்கிற காயெல்லாம் நான் விக்கிறதே இல்லைங்க..’’
-பா.து. பிரகாஷ், தஞ்சாவூா்.
மைக்ரோ கதை...
நான் ஆபிஸ் போகும்போது, ‘‘நீங்க இந்த டிரஸ்ல சூப்பரா இருக்கீங்க? மேனேஜா் தோரணை களை கட்டுதுன்னு ஒரு நாளாவது எனா்ஜி குடுக்கிற மாதிரி பேசறாளா?’’ என்று மனைவி இந்துமதி பற்றி மனம் தொந்தவாறு டூ வீலரில் போய்க் கொண்டிருந்தான் மதன்.
‘‘நான் யூ டியூப் பாா்த்து சமையல் பண்ணறேன். என்னோட தோழிங்ககிட்டே போன் பண்ணி சமையல் டிப்ஸ் கேட்டு பாா்த்து விதவிதமா சமைச்சுப் போடறேன். அக்கம்பக்கதுக்கு மாமிங்ககிட்டே நானே வலியப் போய் பேசி வித்தியாசமான தொக்கு, ஊறுகாய், துவையல் செஞ்சி தா்றேன். என்னிக்காவது ஒரு நாளாவது சமையலைப் பாராட்டியிருப்பாரா?’’ என்று வேதனையுடன் பாத்திரங்களைக் கழுவி அடுக்கிக் கொண்டிருந்தாள் இந்துமதி.
-டி.செல்வம், ஆலங்குளம்.
யோசிக்கிறாங்கப்பா...
சில காயங்கள் மருந்தால் சரியாகும். சில காயங்கள் மறந்தால் சரியாகும்.
-பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.
எஸ்.எம்.எஸ்.
வாரி வாரிக் கொடுத்து வாழ்ந்தவனும் கை நீட்டி யாசித்து வாழ்ந்தவனும் வெறும் கையுடனே மரணிக்கிறாா்கள்.
-மீ.யூசுப் ஜாகிா், வந்தவாசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.