டாப் சினிமா: பாகுபலி - 3, தக் லைஃப்

மணிரத்னம் இயக்கும் 'தக் லைஃப்' படப்பிடிப்பு தில்லியில் தொடக்கம்
டாப் சினிமா: பாகுபலி - 3, தக் லைஃப்
Published on
Updated on
2 min read

தக் லைஃப் ரிலீஸ் தேதி:

மணிரத்னம் இயக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட கமல், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் கசிந்திருந்தது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் சிம்புவும் நடித்து வருகிறார் என்பதை படக்குழுவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

மேலும் இந்தப் படம் ரிலீஸ் குறித்த தகவலையும் வெளியிட்டிருக்கிறது. தக் லைஃப் திரைப்படம் குறித்தான செய்தியாளர் குறிப்பில் இத்திரைப்படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தாண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி', 'இந்தியன் - 2' ஆகிய திரைப்படங்களும் இந்த ஆண்டே வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

'நாயகன்' படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னமும் நடிகர் கமல்ஹாசனும் இணைகிறார்கள். 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் இணைகிறார் நடிகர் சிம்பு. மேலும், கமல்ஹாசன் தயாரிக்கும் நடிகர் சிம்புவின் 48-ஆவது திரைப்படத்தின் முதற்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ராயன் அப்டேட்!

நடிகர் தனுஷ் இயக்கியிருக்கும் 'ராயன்' திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் முதல் சிங்கிளான 'அடங்காத அசுரன்' பாடல் கடந்த வியாழக்கிழமை வெளியாகியிருந்தது. நடிகர் தனுஷ் எழுதியுள்ள இந்தப் பாடலை தனுஷும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தனுஷ், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற இந்தப் படம் வருகிற ஜூன் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

நயன்தாரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பிளாக்ஷீப் சேனல் மூலம் மக்களிடையே பரிச்சயமானவர் ட்யூட் விக்கி. இவர் இயக்குநராக அறிமுமாகும் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். நடிகர் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

விஜய் தேவரகொண்டாவின் லைன் அப்!

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் நானியை வைத்து 'ஜெர்ஸி' திரைப்படத்தை இயக்கிய கௌதம் டின்னுனூரி இயக்கத்தில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இது விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12-ஆவது திரைப்படம். இதனைத் தொடர்ந்து தனது 13-ஆவது திரைப்படத்திற்காக டோலிவுட் இயக்குநர் ரவி கிரண் கோலாவுடன் இணைந்திருக்கிறார்.

மேலும், 'ஷ்யாம் சிங்கா ராய்' படத்தை இயக்கிய ராகுல் சங்கிருத்தியானின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இது விஜய் தேவரகொண்டா நடிக்கும் 14-ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி - 3 அப்டேட்!

'பாகுபலி - கிரவுன் ஆஃப் பிளட்ஸ்' என்ற அனிமேட்டட் வெப் தொடர் வருகிற மே 17-ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இந்த வெப் சீரிஸ் தொடர்பான நிகழ்வு ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமௌலி, 'பாகுபலி எனக்கு எப்போதும் ஸ்பெஷல். அந்தப் படத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு. பலரும் என்னிடம் 'பாகுபலி' திரைப்படத்தின் மூன்றாவது பாகம் எப்போது வெளியாகும் என்று தொடர்ந்து கேட்கிறார்கள்.

'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் முடிந்ததோடு 'பாகுபலி' திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தை தொடங்கியிருக்க வேண்டும். அந்தப் படம் கண்டிப்பாக உருவாகும். இது தொடர்பாக பிரபாஸூடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது' எனப் பேசியிருக்கிறார்.

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி!

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி 'லவ் ஸ்டோரி' எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் 'தண்டேல்' திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் திரை தோன்றல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இருவரும் இணைந்து திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கவிருக்கிறார்கள். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் அல்லு அரவிந்த் வழங்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் பன்னி வாஸ் தயாரிக்கிறார்.

சாய் பல்லவியின் பிறந்த நாளையொட்டி படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் பிரத்யேகமான விடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியின் தொடக்கத்தில் நடிகை சாய் பல்லவி இதற்கு முன் நடித்த திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் காண்பிக்கப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து 'தண்டேல்' படத்தில் அவர் ஏற்றிருக்கும் புஜ்ஜி தல்லி (சத்யா) எனும் கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com