பாலிவுட் திரையுலகமும் சுற்றுலாவும்..!

பாலிவுட் திரைப்படங்கள் பெரும் வெற்றியை மனதில் கொண்டு, அதிக பொருள்செலவில் எடுக்கப்படுபவை.
சுற்றுலா
சுற்றுலா
Published on
Updated on
1 min read

பாலிவுட் திரைப்படங்கள் பெரும் வெற்றியை மனதில் கொண்டு, அதிக பொருள்செலவில் எடுக்கப்படுபவை. ரசிகர்களை மகிழ்விக்க பாடல்கள், முக்கியமான காட்சிகளையும், கண்களுக்கு ரம்மியமான இயற்கை காட்சிகளையும் கொண்ட 'அவுட்டோர் சூட்டிங்குகள்' உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடைபெறும்.

இந்தக் காட்சிகளை படத்தில் காணும் ரசிகர்கள், உடனே அந்த இடத்துக்கு நேரில் சென்று ரசிக்க விரும்புவார்கள். இதனால் அந்த இடங்கள் பிரபலமாகி, பெரிய முன்னேற்றம் அடைவதோடு, அங்குள்ள மக்களும் சுற்றுலா மூலம் நல்ல வருமானம் பெறுகின்றனர்.

காஷ்மீரின் பனி மூடிய சிகரங்கள் முதல் மத்தியப் பிரதேசத்தின் சூரிய ஒளி வீதிகள் வரை பாலிவுட் பல இடங்களை அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு பிரபலமாகியிருக்கும் சில இடங்கள்:

சுவிட்சர்லாந்து

1995இல் வெளியான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' என்ற திரைப்படமானது சுவிட்சர்லாந்தின் அழகான நிலப்பரப்புகளை வெளிகொணர்ந்தது. இதனால் இந்தியர்கள் அங்கு பயணம் செல்லது அதிகரித்தது.

சிம்லா, ரோஹ்டாங் பாஸ்

2007இல் வந்த 'ஜப் வி மெட்' என்ற திரைப்படமானது அழகிய சிம்லா, ரோஹ்டாங் பாஸ் ஆகிய இடங்களை அறிமுகப்படுத்தியது.

ஹவுஸ்காஸ் கோட்டை

தில்லியில் உள்ள பாழடைந்த ஹவுஸ்காஸ் கோட்டையானது ஒரு காலத்தில் இது வரலாற்றுத் தலமாக இருந்தது. ராக் ஸ்டார், கபீர்சிங், தமாஷா ஆகிய திரைப்படங்கள் இந்தக் கோட்டையில் படமாக்கப்பட்டன . காதல், மன வேதனை காட்சிகளில் இந்த இடிந்த கோட்டையை பயன்படுத்தினர். இன்று ஆயிரக்கணக்கானோர் இதனை காண வருகின்றனர். தற்போது இது ஒரு பாப் கலாசார இடம், திருமணத்துக்கு முந்தைய புகைப்படங்களை எடுக்க முக்கிய இடமாகவும் உள்ளது.

சந்தேரி (மத்திய பிரதேசம்)

கலாசார பாரம்பரிய நகரம். இன்று திரைப்படப் புகழ் நகரம். கையால் நெய்யப்பட்ட ஜவுளி, வரலாற்றுத் தலங்களுக்கு பிரபலம். டங்கன்(2016), ராசி(2010), பிளாக் பஸ்டர் தொடர் ஸ்த்ரீ ஆகியன திரைப்படங்களால் இந்த நகரம் பிரபலமானது. கைவினைப் பொருள்கள், சாந்தேரி புடவை மீதான ஆர்வத்தை பலமாகத் தூண்டிவிட்டது.

ரோஹ்தாங் பாஸ் (இமாச்சல பிரதேசம்)

லாஜப் வி மேட், யே ஜவானி திவானி படங்கள் இந்த இடத்தை அழகாக காட்டிக் கொடுத்தன. பனி படர்ந்த இந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் நாடி வருகை தருகின்றனர்.

ஜிரோ பள்ளத்தாக்கு

இதை 'மறைக்கப்பட்ட இரத்தினம்' என அழைக்கின்றனர். இதனை பாலிவுட் தான் அறிமுகப்படுத்தியது. தனித்துவமான பழங்குடி கலாசாரம், பள்ளத்தாக்கின் பசுமை கண்களை சுண்டி இழுப்பவை. பியார் மெயின்ட் விஸ்ட்(2018) மூலமாக, முதன் முதலில் அறிமுகமானது கஹானி3(2021). அதன் அமைதியான இயற்கை காட்சிகளை வெளிப்படுத்தியது. இங்கு ஆண்டு இசை விழா பிரபலமானது.

குரேஸ் பள்ளத்தாக்கு

ஒரு காலத்தில் மலை ஏற்ற வீரர்களுக்கு மட்டுமே தெரிந்த இடம். ஷிகாரா(2020) , பஜ்ரங்கி பைஜான்(2015) ஆகிய திரைப்படங்கள் இந்த பள்ளத்தாக்கின் பசுமையான புல்வெளிகள், பனிமூடிய சிகரங்களை மிகவும் பிரபலப்படுத்தி விட்டன.

3 இடியட்ஸ்(2009), லடாக்கின் பாங்காங் ஏரியை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com