பாடகர் எப்படி இருக்க வேண்டும்?
'பாடகர்கள் எப்படி இருக்க வேண்டும்?' என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை விளக்கினார்.
என்னதான் சொன்னார் அவர்:
'ஒரு பாடகரின் குரல் தனித்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். சிரமமின்றி ஒலிக்க வேண்டும். ஒரு நல்ல குரல் ஒரு நறுமணம் போன்றது. உங்களை நன்றாக உணரவைக்கும் வாசனை திரவியம்.
குரலின் ஆளுமையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. குரல் ஏதாவது சொல்கிறதா? குரல் உங்கள் இதயத்தில் ஒரு அசாதாரண மனநிறைவை உருவாக்குகிறதா? அதுதவிர, அந்த ஒரு குரல் உங்களைச் சமாதானப்படுத்த வேண்டும். அது முக்கியமானது. சரியான குரல் உணர்வுப்பூர்வமான பாடல் வரிகளை முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தையும் மனநிலையையும் சேர்க்கிறது.
அகத்திற்கும் குரலுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நம்புகிறேன். ஒரு குரல் எப்போதும் ஆளுமையைப் பிரதிபலிப்பது. முகம் அகத்தைப் பிரதிபலிக்கிறதுபோல் நல்ல குரல் கடவுளின் வரம் என்றே நினைக்கிறேன். ஆழமான உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை ஆற்றுப்படுத்தும், விளக்க முடியாத வரத்தைப் பெற்றவர்கள்.
தேவை இல்லாமல் எதுவும் பேசக் கூடாது. டுவிட்டரில் அரசியல் கருத்து அது இதுன்னு மத்த விஷயங்களைத் தவிர்க்கணும். வேலைதான் மகிழ்ச்சி. நம்ம பணிதான் நம்ம டையாளம். அதை ஒழுங்காகப் பார்க்கணும்' என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.