"மெய்யழகன்" படத்தைப் பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், படக்குழுவினருக்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார். இப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள "மெய்யழகன்" திரைப்படத்தை தீப ஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை,
பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும்கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம். எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம்" என பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து லைவ்வில் உரையாடினார். அதில், ரசிகர் ஒருவர் சமந்தாவை "கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்குமாறு" கமெண்ட் செய்திருந்தார்அதற்குப் பதிலளித்த நடிகை சமந்தா, "எனது எடை குறித்து மற்றொரு கருத்து... நான் எனது எடையை குறித்த பல்வேறு கமெண்ட்களை சமீபத்தில் பார்த்து வருகிறேன்.உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
இது எனது உடலுக்குத் தேவை. இதுதான் எனது உடலை அதிக எடையிலிருந்து தடுத்து, எனது உடல் நலனுக்கு ஏற்றவாறு சரியான அளவில் என்னை வைத்திருக்க உதவுகிறது. தயவு செய்து மனிதர்களை உடலை வைத்து மதிப்பிடும் கண்ணோட்டத்தை நிறுத்துங்கள். 2024-க்கு வந்துவிட்டோம் நாம். இன்னும் இதுபோல செய்வது சரியல்ல. வாழு, வாழ விடு.. என்பதைப்போல வாழுவோம்" என்று கூறியிருக்கிறார்.
டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை தீபாவளி பண்டிகை தினத்தில் சென்னையில் நடந்தது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே "கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்" என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது.
தனது அப்பாவை நினைவுக் கூறி நெகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். ""இந்தப் படத்தை சரியாக வர காரணம் என்னுடைய தந்தைதான். 21 வருடமாக அவருடைய நினைவுகளில் இருக்கிறேன். முகுந்த் சாருக்கும் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அப்பா இந்த மாதிரி ஊருக்கு வரேன்னு சொன்னாரு. அடுத்த நாள் நான் காலேஜ் போய்ட்டு வரும்போது வீட்டுல கூட்டமா இருந்துச்சு.
அப்பா இறந்திட்டார்னு தெரிஞ்சது. சடங்கு முடிக்கும்போது என்னுடைய அப்பாவோட எலும்பை பார்த்தேன். அங்க உடைஞ்சது அப்பாவோட எலும்பு மட்டும் இல்ல 17 வயசு பையனான என்னுடைய மனசும்தான். இந்தப் படத்தோட க்ளைமேக்ஸ் மாதிரி குடியரசுத் தலைவரிடம் எங்க அம்மா மெடல் வாங்கினாங்க. இந்தப் படத்தின் மூலமாக என்னுடைய அப்பாவை நான் பார்த்துட்டேன்."" என நெகிழ்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.