சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சின்னஞ்சிறு வயதில்...

கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற 'டாடா ஸ்டீல் செஸ் இந்தியா ரேபிட்- பிளிட்ஸ் 2024' விளையாட்டுப் போட்டியின்போது, பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது மூன்று ஆண்டுகள் 9 மாதங்களான குழந்தை அனீஷ் சர்கார்.

News image
அனீஷ் சர்கார்- Picasa
Updated On :23 நவம்பர் 2024, 6:30 pm

பிஸ்மி பரிணாமன்

கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற 'டாடா ஸ்டீல் செஸ் இந்தியா ரேபிட்- பிளிட்ஸ் 2024' விளையாட்டுப் போட்டியின்போது, பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது மூன்று ஆண்டுகள் 9 மாதங்களான குழந்தை அனீஷ் சர்கார்.

உலக செஸ் வரலாற்றில் மிகச் சிறிய வயதில் சர்வதேச செஸ் ஃபெடரேஷனின் மதிப்பீடு பெற்ற இளைய வீரராக, கொல்கத்தாவைச் சேர்ந்த இந்தக் குழந்தை சாதனை படைத்திருக்கிறது.

ஐந்து முறை உலக செஸ் சாம்பியனாக இருந்த நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா, கொனேறு ஹம்பி, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட செஸ் பீஷ்மாக்கள் நேரிலேயே பாராட்டிவிட்ட அனீஷ் சர்காரை அறிவோம்.

போட்டியில் தன்னைவிட வயது முதிர்ந்த ஐந்து மதிப்பிடப்பட்ட இளம் வீரர்களுக்கு எதிராக விளையாடி 1,555 மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற்றவர்தான் அனீஷ் சர்க்கார்.

இதற்கு முன் ஐந்து வயது தேஜாஸ் திவாரியின் சாதனையான 1,523 மதிப்பீட்டுப் புள்ளிகள்தான் வயதில் மிகக் குறைந்தவர் சாதித்த சாதனையாக அமைந்திருந்ததும் முறியடிக்கப்பட்டிருந்தது.

2021 ஜனவரி 26-இல் பிறந்தவர் அனீஷ். கடந்த அக்டோபரில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒன்பது வயதுக்கு உட்பட்டவருக்கான செஸ் போட்டியில் அனீஸ் அறிமுகமானார். போட்டியில் 8 புள்ளிகளுக்கு 5.5 புள்ளிகளைப் பெற்று, ஒட்டுமொத்தமாக 24-ஆவது இடத்தை அனீஷ் பிடித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், 'பெங்கால் ரேபிட் ரேட்டிங் ஓபன் போட்டி'யில், ஏற்பாடு செய்யப்பட சிறப்பு போட்டியில் இந்திய செஸ் வீரர் அர்ஜுன் எரிகைசிக்கு எதிராக சர்கார் விளையாடினார். ஒரு வாரம் கழித்து, அனிஷ் மேற்கு வங்க மாநில 13 வயதுக்குள்பட்ட போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை எதிர்கொண்டார்.

'அனீஷின் திறமையானது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான்கு வயதாகும் என் மருமகன், செஸ்ஸில் சுட்டிதான். என் மருமகனைவிட அனீஷ் பிரமாதமாக செஸ் விளையாடுகிறான். அனீஷுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு' என்று கார்ல்சன் பாராட்டியுள்ளார்.

'அனீஷ் ஒரு வரப் பிரசாதம். கடவுள் அருளால் பிறந்திருக்கும் குழந்தை. குழந்தையால் சதுரங்க நகர்வுகளை இவ்வளவு துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிவது சாத்தியம் இல்லை. ஆனால் செஸ்ஸை புரிந்துகொள்வதில் வயது ஒரு தடையில்லை என்று அனீஷ் நிரூபித்திருக்கிறார். எனக்கே செக் வைக்கும் விதத்தில் காய்களை நகர்த்துவது எனக்குப் பிடித்திருக்கிறது. மலைக்க வைக்கிறது. அனிஷுக்கு திறமை அதிகமாக இருக்கிறது. அனீஷ் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது' என்கிறார் அனீஷின் பயிற்சியாளர் பருவா.

அனீஷின் அம்மா கூறியது:

'அனீஷுக்கு மூன்று வயதானபோது டி.வி.யில் குழந்தைகளுக்கான கார்ட்டூன்களை போட்டு காண்பித்தோம். அவற்றைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டாமல், செஸ் குறித்த வீடியோக்களை அக்கறையுடன் பார்த்தான். சதுரங்கப் பலகையை வாங்கிக் கொடுத்தேன். எனக்கு செஸ் கொஞ்சம் கூட வராது. அனீஷின் அப்பாவுக்கு சதுரங்கம் ஆட கொஞ்சம் தெரியும். என்றாலும் அனீஷை வெற்றி கொள்ள அவரால் முடியவில்லை. பரூவா சாரிடம் சேர்த்துவிட்டோம்.

நாங்கள் சாதாரண குடும்பம். அதனால் டாடா செஸ் போட்டியில் அனீஷ் பிரபலமானதும் எங்களையும் பேட்டியும் படம் பிடிக்க ஊடகத்தினர் அணுகினார்கள். அனீஷ் கிராண்ட் மாஸ்டராகும் வரை எங்கள் குறித்த செய்தி, படங்கள் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம். அனீஷ் மீது எந்த அழுத்தமும் வராமல் பார்த்துக் கொள்கிறோம். அனீஸ் செஸ் சானல் பார்ப்பதைக் கூட நாங்கள் வற்புறுத்துவதில்லை. அனீஷின் உண்மையான ஹீரோ வேறு யாருமல்ல; மேக்னஸ் கார்ல்சன்தான். அவரிடமே அனீஷ் பாராட்டு பெற்றுவிட்டான்' என்கிறார்.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.