'அமரன்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 300 கோடி எட்டியிருப்பதைக் கொண்டாடும் வகையில், தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவுக்குப் பிரியாணி விருந்து வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ருக்மினி வசந்த், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தை முடித்த பிறகு 'டான்' படத்தின் இயக்குநரான சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதை அவரே உறுதி செய்திருக்கிறார்.
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ. ஆர். ரஹ்மான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 29 ஆண்டு கால திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார் சாய்ரா பானு.
இது குறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர், ' திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு சாய்ரா தனது கணவர் ஏ.ஆர். ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் சில சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை கண்டறிந்துள்ளார்.
வலி மிகுந்த இந்த சூழலுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார் சாய்ரா. இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடமிருந்து தனியுரிமை மற்றும் புரிதலைக் வேண்டுகிறார் சாய்ரா.' என அறிவித்திருக்கிறார்.
விஜய்யின் 69- ஆவது படத்தில் சிவராஜ்குமார் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. . இது பற்றி அவர், 'சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் அ. வினோத் என்னைச் சந்திப்பதற்காக வந்தார். இந்த முறை அந்தக் கதாபாத்திரம் அமையவில்லை. வரும் காலங்களில் வேறு கதாபாத்திரங்களை எனக்குச் சொல்வதாகக் கூறியிருக்கிறார்.
இந்த முடிவு எதனால் பின்வாங்கப்பட்டது என எனக்குத் தெரியவில்லை. நானும் பல திரைப்படங்களை கமிட் செய்திருக்கிறேன். 'தளபதி 69'-இல் நடிக்க வேண்டுமென்றால் என்னுடைய தேதிகளை மாற்ற வேண்டிய நிலை வந்திருக்கும். தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன்.' என தெரிவித்துள்ளார்.
விடுதலை முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த சம்பவங்கள் பலவும் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவங்களை நினைவூட்டின. படத்தின் கதைக்களம், அதன் மாந்தர்கள், அரசியல் பின்புலம் போன்றவற்றைக் கட்டமைத்து, அந்த உலகத்தை நமக்கு அறிமுகம் செய்யும் ஒன்றாக உருவாகியிருந்தது.
அதைப் போல, இரண்டாம் பாகமும் வலுவான ஒரு விஷயத்தை முன்நிறுத்துகிறது என்கிறார்கள். ரிலீஸூக்கு இன்னும் குறுகிய நாட்களே இருப்பதால், படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்து, இதர பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.