கோலிவுட் ஸ்டூடியோ!

அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களை லைப் அப்பில் தற்போது வைத்திருக்கிறார்.
விடாமுயற்சி
விடாமுயற்சி
Published on
Updated on
2 min read

கார் ரேஸில் அஜித்

அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களை லைப் அப்பில் தற்போது வைத்திருக்கிறார். 'விடாமுயற்சி' திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்தை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரம் இயக்கி வருகிறார்.

திரைத்துறையைத் தாண்டி ஆட்டோமொபைலிலும் அதீத ஆர்வம் கொண்டவர் அஜித் என்ற செய்தி ஊர் அறிந்ததே! கார் ரேஸ் மீதும் அலாதியான பிரியம் கொண்ட அஜித் இதற்கு முன் பார்முலா ரேஸ்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

2025-இல் நடைபெறவுள்ள ஐரோப்பியா 4 சாம்பியன்ஷிப் ரேஸின் அஜித் பங்கேற்கவிருப்பதாக இந்திய மோட்டர் ஸ்போர்ட் சம்மேளம் அறிவித்திருந்தது. இந்தியாவின் முன்னனி கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயனும் அஜித் விரைவில் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவிருப்பதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அந்தப் பதிவில், ' துபாயில் ஃபெராரி 488 இ.வி.ஒ சேலஞ் காரை செஸ்ட் செய்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய ரேஸிங் சீசனுக்கு தயாராகி வருகிறார். புதிய ஹெல்மெட் பெயின்ட் ஸ்கீமை அறிமுகப்படுத்துவதிலும் மகிழ்ச்சி. பயணத்துக்கு ரெடி!' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நெகிழ்ந்த இளையராஜா

இந்தியத் திரையுலகில் 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 2020, செப்டம்பர் 25-ஆம் அவர் இறந்து நான்காண்டுகள் ஆனாலும், தமிழ் நெஞ்சங்களில் 'பாடும் நிலா'வாக என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அவரின் நினைவாகவும், அவரின் புகழைப் போற்றும் வகையிலும், தன் கடைசி மூச்சு வரை அவர் வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எஸ்.பி.பி-யின் மகன் சரண் கோரிக்கை வைத்தார்.

இதனை உடனடியாக ஏற்ற முதல்வர் ஸ்டாலின், 'பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவு நாளில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில், பாலுவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அதைத்தொடர்ந்து, 'மனு அளித்து 36 மணி நேரத்தில் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்த அரசுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மிக்க மிக்க நன்றி' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சரண்.

இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நண்பரும், இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 'என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று ட்வீட் செய்திருக்கிறார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

1990-களின் இறுதியில் கோலிவுட்டில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் கொண்டு பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன்.

கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து சற்று விலகியிருந்த சிம்ரன், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்தார்.

'பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்து, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் குறித்து சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக வதந்திகள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது 'எக்ஸ்' பக்கத்தில், 'என்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்' என்று காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

'உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒருவரைப் பாதிக்கும்படியாகச் சிலர் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதைப் பார்க்கையில் மன வருத்தமாக இருக்கிறது.

என் திரையுலக வாழ்வில் இதுவரை நான் எந்த வதந்திகளுக்கும் பதிலளித்தது கிடையாது. இப்படியான விஷயங்களைக் கடந்து சென்று விடுவேன். ஆனால் இப்போது என்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதுவரை நான் எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன் அவ்வளவுதான். இப்போது என் இலக்குகள், என் வாழ்க்கை எல்லாம் முற்றிலும் மாறிவிட்டன.

சமூக ஊடகங்களில் என் பெயரை, வேறு ஒருவருடன் இணைத்துப் பேசுவதைப் பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஆனால், சுயமரியாதை என்பது எல்லாவற்றையும்விட ரொம்ப முக்கியம்.

இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திவிடுங்கள் என்பதை அழுத்தமாகக் கூறிக் கொள்கிறேன். இங்கு யாரும் நமக்கு ஆதரவாக நிற்கப்போவதில்லை. நாம்தான் நமக்காகக் குரல் கொடுத்தாக வேண்டும். எனக்காக நான்தான் பேசியாக வேண்டும்.

நம் சினிமா துறையில் நேர்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். என்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்' என்று சிம்ரன் கூறியிருக்கிறார்.

இது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com