குர்ச்சி மடத்தப்பட்டி...

தெலுங்குப் பட உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலீலா , படப் பிடிப்புக்கு வரும்போது மருத்துவப் பாட நூல்களைக் கொண்டுவருகிறார்.
நடிகை ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலா
Published on
Updated on
1 min read

தெலுங்குப் பட உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலீலா , படப் பிடிப்புக்கு வரும்போது மருத்துவப் பாட நூல்களைக் கொண்டுவருகிறார். இவர் தனக்குத் தரப்பட்டிருக்கும் கேரவனை ஒரு நூலகமாகவே மாற்றியிருக்கிறார்.

அமெரிக்காவில் பிறந்தாலும் படித்தது, வளர்ந்தது பெங்களூரில்தான். பெங்களூரு மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலீலா 2023-இல் இரண்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளை (குரு, ஷோபிதா) தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.

அவர் கூறியதாவது:

'குரு, ஷோபிதாவை எனது 22--ஆவது வயதில் தத்து எடுத்தது வாழ்க்கையில் நான் செய்த சரியான முடிவு. இருவரும் எனது வானத்தின் இரண்டு துருவ நட்சத்திரங்கள்.

எனது அம்மா மகப்பேறு மருத்துவர். சிங்கிள் மதர். மற்ற சிறுமிகள் பூங்காவில் ஓடி விளையாடும்போது, நான் நடன வகுப்புக்குப் போய்க் கொண்டிருந்தேன். பயிற்சி முடிந்ததும் வீணை கிளாஸ். பிறகு நீச்சல் பயிற்சி. இறுதியில் டியூஷன். ஆக நான் தினமும் பள்ளிக்கும் பயிற்சிக்கும் என்று ஓடிக் கொண்டிருந்தேன். பிறகு அதுவே பழக்கமாகிவிட்டது.

சிறு வயதிலேயே மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் என்னோடு ஒட்டிக் கொண்டது.

எங்கள் குடும்ப நண்பரான புவன் கவுடா, எனது புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டார். இதை கன்னட இயக்குநர் ஏ.பி.அர்ஜுன் பார்க்க, நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிக்க வந்தது முற்றிலும் தற்செயலானது.

வீட்டில் நடனம் ஆடுவேன். வீட்டில் உள்ளவர்களுக்கு பொழுதுபோக்கின் ஓர் அங்கமாக எனது நடனம் அமைந்திருந்தது. அம்மா, தாத்தா, பாட்டிதான் எனது ஆரம்ப ரசிகர்கள். இன்று நடிகையானதால் அதுவும் 'குண்டூர் காரம்' படத்தில் 'குர்ச்சி மடத்தப்பட்டி ..' என்ற பாட்டில் எனது நடனம் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளேன்.

கன்னடம் நன்றாகத் தெரியும். தெலுங்கு, தமிழ் பேசுவேன். நான் சைவம். தோசை, இட்லிகளை மிகவும் பிடிக்கும்.

'தி கோட்'. படத்தில் 'மட்ட...' என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா வாய்ப்பு கிடைத்தது. ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆடும் வாய்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'புறநானூறு' படத்தில் நடிக்க உள்ளேன்'' என்றார் ஸ்ரீலீலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com