திரைக் கதிர்

சர்வதேச விருதுகளை அள்ளி வந்திருக்கிறது 'அந்த நாள்'.
திரைக்  கதிர்
tamilmoons
Updated on
1 min read

சர்வதேச விருதுகளை அள்ளி வந்திருக்கிறது 'அந்த நாள்'. நியூயார்க் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது, அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் சர்வதேச விழா விருது,

சிங்கப்பூரில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் சிறந்த சாதனை விருது, தாகூர் சர்வதேச பட விழாவில் விமர்சகர்களின் தேர்வு விருது, லண்டன் பட விழாவில் சிறந்தப் படத்திற்கான விருது என பல சர்வதேச விருதுகளைக் குவித்துள்ளது இந்தப் படம். வி.வி.கதிரேசன் இயக்கத்தில் ஆர்யன் ஷாம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், நரபலி மற்றும் மனித தியாகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முகலாய ஆட்சியாளர்களால் ஆட்சி அதிகாரங்களை பெறுவதற்காக தங்களது நரபலி தெய்வமான மாயாயாகினிக்கு நரபலி கொடுப்பார்களாம். இதைப் பின்னணியாகக் கொண்டது இக்களம்.

'எங்கள் அப்பா' என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்திருக்கிறார் குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷி. 3 வயதிலேயே திருக்குறளை, சிலப்பதிகாரத்தை மனப்பாடமாக சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டவராக இருக்கிறார் இவர். தற்போது வெளியாகியுள்ள எங்கள் அப்பா மியூசிக் ஆல்பத்திலும் இவரது நடிப்பு, நடன அசைவுகள், பாடலுக்கு வாயசைப்பது போன்ற வெளிப்பாடுகள் நுணுக்கமாக உள்ளதாக பாராட்டப்பட்டுள்ளார். பல யூடியூப்களில் ஓவியங்கள் வரைவது, சமையல் டிப்ஸ் சொல்வது போன்ற நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வருகறார்.

'நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற தலைப்பிலான இந்த டாக்குமென்ட்ரி வெளியாகவிருக்கிறது என்ற தகவல் நெட்ஃபிளிக்ஸிடமிருந்தே கிடைத்திருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இந்த டாக்குமென்ட்ரியின் பேஜ்ஜில் இதன் கால அளவையும் தற்போது அப்டேட் செய்திருக்கிறார்கள். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் 1 மணி 21 நிமிடங்கள் கால அளவைக் கொண்டதாம். கூடிய விரைவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த டாக்குமென்ட்ரி வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஐரோப்பியன் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. ரேஸிங் பக்கம் களமிறங்கும் அஜித்துக்கு அவரின் மனைவி ஷாலினி ஒரு வாழ்த்துப் பதிவை போட்டிருக்கிறார். அவர், ' ரேஸிங் டிரைவராக உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு பிடித்ததை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான ரேஸிங் பயணத்துக்கு உங்களுக்கும் உங்கள் அணிக்கும் வாழ்த்துகள்.' என பதிவிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com