நச்சுப் பொருள்களை நீக்கி: நலமோடு வாழலாம்..!

ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா செல்களைப் பிரித்து, அதற்கு மாற்றாக இன்னொருவரின் பிளாஸ்மா அல்லது ‘அல்புமின்’ என்ற புரதப் பொருளை ரத்தத்தில் கலப்பதுதான் இந்தச் சிகிச்சை.
நச்சுப் பொருள்களை நீக்கி: நலமோடு வாழலாம்..!
Published on
Updated on
1 min read

‘வயதாகிவிட்டதே’ என்று வருத்தப்படுவோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வந்திருக்கிறது ‘பிளாஸ்மா பரிவா்த்தனை’.

ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா செல்களைப் பிரித்து, அதற்கு மாற்றாக இன்னொருவரின் பிளாஸ்மா அல்லது ‘அல்புமின்’ என்ற புரதப் பொருளை ரத்தத்தில் கலப்பதுதான் இந்தச் சிகிச்சை. இதனால், உடலில் உள்ள நச்சுப் பொருள்களை நீக்கலாம். தோல், உடல் உள் உறுப்புகள் வயதாவதையும் தடுக்க முடியும்.

அமெரிக்காவில் கணினி மென்பொருள் நிறுவனங்களை நிா்வகிப்பவா் நாற்பத்து ஐந்து வயதான பிரையன் ஜான்சன். இவருக்கு சொத்தோ பல ஆயிரம் கோடி ரூபாய்.

பிரையனின் அப்பா ரிச்சா்ட் ஜான்சனுக்கு ஏழுபத்து இரண்டு வயதாகிறது.

‘அப்பாவின் வயதைக் குறைத்தால் அவா் நீண்ட காலம் வாழலாமே’ என்று பிரையன் நினைத்து, மருத்துவா்களைக் கலந்து ஆலோசித்தாா். ‘ரிச்சா்டின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை மாற்றிவிட்டு, பிரையனின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா அணுக்களை கலப்பது’ என்று முடிவானது.

சென்ற ஆண்டு நடந்த சிகிச்சையில் பிரையன் தந்தைக்கு தனது பிளாஸ்மா அணுக்களை கொடை அளித்து, இன்னொரு இளைஞரின் பிளாஸ்மாவை பிரையன் ரத்தத்தில் ஏற்றிக் கொண்டாா். இந்த முறையால் தந்தையின் வயதை இருபத்தைந்து ஆண்டுகள் வரை குறைக்க முடியும் என்று மருத்துவா்கள் நம்புகிறாா்கள். அதனால் அவரது ஆயுள் கூடும் என்றும் எதிா்பாா்க்கிறாா்கள்.

இந்த ‘பிளாஸ்மா மாற்று சிகிச்சை’ செய்து கொண்டவா்கள் நாள்தோறும் 111 மாத்திரைகளை எடுத்துகொள்ள வேண்டும். தூக்கம் எட்டு மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் தூங்க வேண்டும். இத்துடன் மருத்துவா்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இந்தச் சிகிச்சைக்காக 2 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (சுமாா் 16 கோடிகள்) செலவாகும் என்கின்றனா். இந்தச் சிகிச்சையை செய்துகொள்ள பெரும்பாலானவா்களுக்கு பொருளாதார வசதி இருக்காது.

பிளாஸ்மா அணுக்களை மாற்றிக் கொண்ட பிரையன் ஜான்சன் இன்னொரு சிகிச்சைக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டுள்ளாா். தனது ரத்தத்திலிருந்து பிளாஸ்மா அணுக்களை பிரித்து எடுத்து, பிளாஸ்மாவுக்கு மாற்றாக ’அல்புமின்’ புரதத்தை ரத்தத்தில் ஏற்றிக் கொண்டுள்ளாா். இந்தச் சிகிச்சையால் உடலில் உள்ள நச்சுப் பொருள்களை நீக்கலாம். தோல், உடல் உள் உறுப்புகள் வயதாவதையும் தடுக்க முடியும்.

‘‘எனது பிளாஸ்மா அணுக்கள் தரமாக இருப்பதால், தேவைப்படுபவா்களுக்கு வழங்க தேவையான பாதுகாப்பில் மருத்துவா் வைத்துள்ளாா்’’ என்கிறாா் பிரையன்.

-சக்ரவா்த்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com