
கேஏகே.
சாலை விபத்துகள் பெரும்பாலும் அதிகாலை நேரங்களில் நேரிடுகின்றன. நீண்ட நேரம் கண்விழித்து வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் சற்று கண் அயரும்போது, விநாடி நேரத்தில் நடைபெறும் விபத்துகளுக்கு யாரையும் பொறுப்பாக்க முடியாது. விபத்துகளைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள்.
நாம் வாகனங்களைச் சாலையின் இடது ஓரத்தில் ஓட்டுகிறோம். உலகில் பெரும்பாலான நாடுகளில் வலதுப் புறமே வாகனங்களை ஓட்டுகின்றனர். இந்தியா உள்பட ஐம்பது நாடுகளில் மட்டுமே இடதுபுறத்தில் வாகனங்களை இயக்குகிறோம். அமெரிக்காவில் வலதுபுற இயக்கம்தான்.
வாகனங்களில் கண்ணாடி பராமரிப்பு முக்கியமானது. பகலில் வாகனம் ஓட்டுவதைக் காட்டிலும், இரவில் வாகனம் ஓட்டும்போது கண்ணாடியைச் சுத்தமாக வைத்துகொள்வது மிகவும் அவசியம். எதிரே வரும் வாகனங்களைத் தெளிவாகப் பார்க்க, கண்ணாடியைச் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. கார்களின் கண்ணாடிகளைச் சுத்தமான பருத்தித் துணிகளைப் பயன்படுத்தினால், கீறல்கள் ஏற்படாது.
வைப்பர் பிளேடு மோசமான நிலையில் இருந்தால் மாற்றிவிடுவது நல்லது. இல்லையெனில், அவை கண்ணாடிகளில் கீறல்களை ஏற்படுத்தலாம். கீறல் விழுந்த முன்புறக் கண்ணாடியுடன் இரவில் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயமானது.
வைபர் இருக்கும் கார்களில் கண்ணாடியின் மீது ஆவி படர்ந்திருக்கும்போது மட்டும் ஸ்விட்ச் ஆன் செய்து பனி மறைந்தவுடன் அதை அணைத்துவிடுவது நல்லது. இதை அதிக நேரம் ஆன் செய்து வைத்திருந்தால், வெப்பத்தால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெயிலில் அதிக நேரம் வாகனத்தை நிறுத்தி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், கார் கதவில் இருக்கும் கண்ணாடிகளை முழுமையாக மூடி வைக்காமல் ஏதாவது ஒரு கதவின் கண்ணாடியை கொஞ்சம் திறந்தநிலையில் வைப்பது நல்லது. கண்ணாடிகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும்போது, காற்று புக வாய்ப்பு இல்லாமல் உள்ளே வெப்பம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கண்ணாடியில் விரிசல் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
வாகனங்களை ஓட்டும்போது, ஓட்டுநர்கள் கண் அயர்ந்தால் உணர்த்தும் வகையில், "நோவுஸ் அவேர்' எனும் செயற்கை உணர் கருவியை தில்லியைச் சேர்ந்த "ஹைடெக் ரோபோடிக் சிஸ்டம்ஸ்' நிறுவனம் உருவாக்கியுள்ளது. விரைவில் இந்தக் கருவிகள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.