வாராய் நீ வாராய்...

மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தில் தயாரித்த படம் "மந்திரிகுமாரி'.
பாடல் காட்சி
பாடல் காட்சி
Published on
Updated on
2 min read

மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தில் தயாரித்த படம் "மந்திரிகுமாரி'. அந்தப் படம் வெளிவருவதற்கு முதல்நாள் பட அதிபர் டி.ஆர்.சுந்தரம் படத்தின் இசையமைப்பாளர் சங்கீத சக்கரவர்த்தி ஜி.ராமநாத ஐயரிடம் , 'படத்தில் உள்ள "வாராய் நீ வாராய்- நாம் போகும் இடம் வெகுதூரமில்லை- நீ வாராய்' எனும் பாடலை நீக்கிவிடுவோம். கதை வேகத்துக்குத் தடையாகும்'' என்றார். இதற்கு இசையமைப்பாளரோ, 'படம் ஒருநாள் ஓடட்டும். மக்கள் ஏற்காவிட்டால் நீக்கிவிடலாம்'' என்றார்.

திரைப்படம் வெளியானவுடன் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் இந்தப் பாடலை முணுமுணுத்தபடியே வந்த அதிசயம் நடைபெற்றது. பெரும் மகிழ்ச்சி அடைந்த சுந்தரம் இசையமைப்பாளர் ராமநாத ஐயரை அழைத்து, வெகுவாகப் பாராட்டினார்.

காரணம் ராமநாதன் தனக்கு மிகவும் பிடித்த "பீம்பளாஸ்' ராகத்தில் அமைத்த வர்ணமெட்டு படம் பார்த்தோர் இதயத்தைப் பற்றிக் கொண்டமையே. வடநாட்டில் "பீம்பளாஸ்' எனும் பெயரைக் கொண்ட இந்த ராகம் தென்னாட்டில் "ஆபேரி' என்னும் பெயரைக் கொண்டுள்ளது.

"கோமதியின் காதலன்' எனும் திரைப்படத்திலும் "ஆபேரி' என்னும் பீம்பளாஸ் ராகத்தில் மெட்டு அமைத்துள்ளார்.

"அன்பே என் ஆரமுதே வாராய்' எனும் பாடலை சீர்காழி கோவிந்தராஜனும் ஜிக்கியும் இனிமையாகப் பாடியுள்ளனர்.

"ஆபேரி' என்னும் ஜன்னிய ராகம் "நடபைரவி' எனும் இருபதாவது மேளகர்த்தா ராகத்தில் பிறந்ததாகும். சாயலில் ஆபேரி என்னும் பீம்பளாஸ் போல உள்ள ஜன்னிய ராகங்கள். சுத்த தன்யாசி, ரதிபதிபிரியா ஆகிய ராகங்களும் நடபைரவியில் பிறந்ததாகும்.

நட பைரவி ராகம் :

டி.எம்.சௌந்தராஜன் பாடிய தனிப்பாடல்

அழ கென்ற சொல்லுக்கு முருகா- உன்றன்

அருளின்றி உலகிலே பொருளேது முருகா

சுடராக வந்த வேல் முருகா- கொடும்

சூரனை போரில் வென்றவேல் முருகா

படம்: எங்கள் தங்க ராஜா படத்தில்

நட பைரவி ராகம்:

பாடல்:

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை

இதயத்தில் விழுந்தது திருமண மாலை

உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்

உலகம் நமக்கினி அனந்தக் கோலம்

இருவர் என்பதே இல்லை- இனி நாம்

ஒருவர் என்பதே உண்மை

குழந்தையும் தெய்வமும்   திரைப்படத்தில்...
குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில்...

படம்: கர்ணன்

சுத்த தன்யாசி, தாய் ராகம், நடபைரவி

கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே

கண்ட போதே சென்றன அங்கே

கால்கள் எங்கே மேனியும் இங்கே

காவல் இன்றி வந்தன இங்கே

படம்: குழந்தையும் தெய்வமும்

ரதிபதி பிரியா: ராகம்- தாய் ராகம், நடபைரவி

பழமுதிர் சோலையிலே - தோழி!

பார்த்தவன் வந்தானடி- அவன்

அழகுதிருமுகத்தில்

இழையும் நகையெடுத்து

ஆரம்பம் சொன்னானடி- தோழி

ஆரம்பம் சொன்னானடி

எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடியது

"ஜக ஜனனி- சுகவாணி கல்யாணி' எனும் தனிப்பாடல் புகழ் பெற்ற ரதிபதி பிரியா ராகப் பாடல் ஆகும். சற்றேறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன் சீர்காழியில் தோன்றிய இசை மேதை. முத்துத்தாண்டவர் பாடலொன்று ஆபேரி ராகத்தில் இசையமைக்கப் பெற்றுள்ளது.

ஆபேரி - சுரம்

ஆரோகணம்

ச க ம ப நி ச

1 1 1 - 1 1

அவரோகணம்

ச நி த ப ம க ரி ச

1 1 1 - 1 1 2 -

என்னை எனக்குத் தெரியச் சொல்வாய்- தில்லைப் பொன்னமல்லத்தரசே

தன்னை அறியும் அறிவதும் நீ சற்றுத்

தப்பவொண் ணா திப்போது சாமி சமயம்

புதமும் நானல்ல பொறி புலன் நானல்ல

ஓதும் அனாதி ஒருநான்கும் நானல்ல

போதக் கழுவி புறம்பல்ல உள்ளல்ல

வாதமும் நானல்ல- என்று மயங்கும்

தாளம்- ரூபகம்- தகிட தகிட

நான் எழுதி அரங்கேற்றிய "கிழக்கு வெளுத்தது' என்னும் நாடகத்தில் நானே பாடல் எழுதி மெட்டமைத்த நாட்டுப்புறப் பாடல் "ஆபேரி' ராக அடிப்படையில் அமைந்த மெட்டு.

பெண்

பயிறு பறிக்கையிலே

பக்கத்திலே நீயிருந்தால்

வெயிலும் சுடுவதில்லை- என் மச்சானே

வெவரம் என்ன புரியுதில்லையே

ஆண்

மயிலு என் ஓரத்துலே

வந்து நிற்கும் நேரத்துலே

வயிலும் ஓரழலாகுது-

அட உன்னைத்தான்

வட்டமிட்டு மனம் வாடுது

இது பலர் விரும்பிக் கேட்ட மெட்டானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.