ஆறுகளே இல்லாத நாடுகள்...

ஆறுகள் இல்லாவிடில் மனிதர்களின் குடிநீர், வளர்ச்சிகள் கடுமையாகப் பாதிக்கும். ஆனால், சில நாடுகளில் ஆறுகளே கிடையாது.
வாடிகன்சிட்டி
வாடிகன்சிட்டி
Published on
Updated on
1 min read

ஆறுகள் இல்லாவிடில் மனிதர்களின் குடிநீர், வளர்ச்சிகள் கடுமையாகப் பாதிக்கும். ஆனால், சில நாடுகளில் ஆறுகளே கிடையாது.

சௌதி அரேபியா: ஆறுகள் இல்லாத மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. இந்த நாடு கடல்நீரை குடிநீராக மாறுகிறது. 70 % குடிநீர் உப்புநீக்கம் மூலம் கிடைக்கிறது. மேலும், மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

கத்தார்: நதிகள் இல்லை. இந்த நாடும் கடல்நீரை உப்பு நீக்கம் செய்துதான் பயன்படுத்திவருகிறது. இங்குள்ள நீர் 99% உப்புநீக்கம் மூலமே கிடைக்கிறது. கத்தார் உலகிலேயே அதிக தனிநபர் நீரைப் பயன்படுத்தும் நாடாகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: துபை, அபுதாபி மிகப் பிரபலமான நாடுகள். இவ்விரு நாடுகளும் கடல்நீரை சுத்திகரித்துதான் பயன்படுத்துகின்றன. தொழிற்சாலைகளில் அழுக்குநீர் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

குவைத்: அரேபிய வளைகுடாவின் வடக்குப் பகுதியில் உள்ள நாடு. இங்கும் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு நல்நீர் பெறப்படுகிறது.

மாலத்தீவுகள்: கடல்நீரை சுத்தமாக்க, பணவசதி இல்லை. இதனால் மழைநீரை சேமித்து, சுத்திகரித்து பயன்படுத்துகிறது.

பக்ரைன்: பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு தீவு நாடு. இயற்கையான ஆறுகள் இல்லை. மாறாக, நிலத்தடிநீர் ஆதாரங்கள், நீருற்றுகள் உள்ளன.

ஓமன்: அரேபிய தீபகற்பகத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ளது. பல பள்ளத்தாக்குகள் உள்ளன. மழைக்காலத்தில் அவற்றில் தண்ணீர் நிரம்பி கால்வாயாக உருவாகிறது. தண்ணீரைச் சேமிக்க, பல்வேறு விவசாயத் தொழில்நுட்பங்களை இந்த நாடு பின்பற்றி வருகிறது.

வாடிகன்சிட்டி: ஆறுகள் இல்லை. ஆனால், இத்தாலி இந்தப் பகுதிக்கு நீர்விநியோகம் செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com