எட்டு திக்கும்..!

உலகில் வியக்க வைக்க வைக்கும் விஷயங்கள்.
எட்டு திக்கும்..!
Published on
Updated on
2 min read

உலகில் வியக்க வைக்க வைக்கும் விஷயங்கள்.

மனிதர்களுக்கு அதிகாரபூர்வமாக ஒரு பெயர் இருக்கும். சில சமயம், வேறு பெயரும் இருக்கும். இதேபோல் உலகின் நாடுகளுக்கு உள்ள மற்றொரு பெயரை அறிவோம்.

ஜெர்மனி: அதிகாரபூர்வ பெயர் பெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி. ஜெர்மானிய மொழியில் தங்கள் நாட்டை 'டாய்ட்ச்லாந்து' என அழைப்பர்.

ஜப்பான்: 'லாண்ட் ஆஃப் ரைசிங் சன்' என செல்லப் பெயருண்டு. 'நிப்பான்' என ஜப்பானிய மொழியில் அழைப்பர். நிப்பான், ஜிபாங்கு என்ற பெயர்களும் உண்டு. நிகான் என்றால், 'சூரியன் தோற்றம்' எனப் பொருள்.

கீரிஸ்: இந்த நாட்டின் மக்கள் 'கிரிக்ஸ்' என அழைக்கப்படுகின்றனர். ஆனால், கிரிஸின் அதிகாரபூர்வப் பெயர் 'ஹெலெனிக் ரிபப்ளிக்'.

பின்லாந்து: 'ஆயிரம் ஏரிகளின் நாடு' என்பது செல்லப் பெயர். இந்த நாட்டில் 1,87,888 ஏரிகள் உள்ளன. இங்குள்ள ஏரிகளில் சீல் மிருகங்கள் உள்ளன. பின்லாந்தின் தொலைதூர வடக்கு மாகாணம் 'லாப்லாந்து' என அழைக்கப்படுகிறது.

நகரவாசிகள் பலர் மரங்கள் அடர்ந்த கிராமங்களில் அவ்வப்போது சென்று வசிக்க ஏதுவாய் அங்கு வீடு கட்டிக் கொள்கிறார்கள். சானா இல்லாத வீடு அபூர்வம். அதிக வெப்பம் கொண்ட அறையில் நீராவி குளியல் செய்யலாம்.

ஹங்கேரி: இந்த நாட்டின் பிரபலமான பெயர் மாக்ய ரோர்ஸ்சாக். முதலில் உங்கரியா, பிறகு ஹங்காரியா. இன்று ஹங்கேரி.

எகிப்து: கிஃப்ட் ஆப் நைல் என அழைப்பர். அராபிக்கில் மைசர். இதனை 'பாரோஸ் பூமி' எனவும் அழைப்பர். இவர்கள் முன்பு எகிப்தை ஆண்டவர்கள். இவர்களை பூமியை ஆள வந்த இறை வழி தூதர்கள் எனவும் அழைப்பர்.

சீனா: இது பியூப்மில்ஸ் ரிபப்ளிக் ஆஃப் சீனா. 'மெயின் லாண்ட் சைனா' என்றும் அழைப்பர்.

தென் கொரியா: ரிபப்ளிக் ஆஃப் கொரியா. 'ஹாங்குக்' என்ற பெயரும் இதற்கு உண்டு.

பைக்கால் ஏரி: உலகின் மிக பழமையான, ஆழமான ஏரி. மலைகளால் சூழப்பட்ட ஒரு ஆழமான பள்ளத்தில் அமைந்துள்ளது. சில இடங்களில் மேற்பரப்பிலிருந்து 200 மீட்டர் ஆழத்தில் உள்ளது.

உலகில் உறையாத தண்ணீரில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது. 25-35 மில்லியன் ஆண்டுகள் பழையது. ஆழம் அதிகபட்சம் 1,642 மீட்டர். நல்ல தண்ணீர் என்றாலும் குடித்துவிட முடியாது. இதனுள், பக்கவாட்டில் 1,500 உயிரினங்கள், 1,000 தாவரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உலகின் மற்ற இடங்களில் காண முடியாதவை. இதனால் இதற்கு 'கலபாகோஸ் தீவுகள்' என செல்லப் பெயருண்டு. ரஷ்யாவின் தென் சைபீரியா பகுதியில் உள்ளது. பெல்ஜியம் நாட்டை விட பெரியது.

குளிர்காலத்தில் மைனஸ் 19 டிகிரி வரை இறங்கி உறைந்துவிடும். பனிக்கட்டி ஒரு மீட்டர் ஆழம் வரை. வெளிப்படையாக தெரியும்.

ஓல்கான் தீவைச் சற்றியுள்ள பனிப் பாதை 200 கி.மீ. தூரம் வரை நீளும். இங்கு பனிக்கால சிலைகளை காணலாம். அருகில் உள்ள குகைகளில் உறைந்ததால் தரும் நூதன காட்சிகளை ரசிக்கலாம். சில இடங்களில் கார் பயணம் கூட உண்டு.

இந்த ஏரிக்கு செலங்கா, பார்குசின், அப்பர் அங்காரா நதிகள் இனைகின்றன. ஒரு கட்டத்தில் அங்காரா மட்டும் பிரிந்து விடுகிறது. இந்த ஏரியின் வளைந்து வளைந்து செல்லும் கரையின் நீளமே 2100 கி.மீட்டர். இதனால் ரஷ்யர்கள் இதனை 'பைக்கால் கடல்' எனவும் கூறுவர். சொகுசு கப்பல் சவாரிகள் நடக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com