சிரி... சிரி...

மொதல்ல நர்ஸ் செக் பண்ணுவாங்களாம். அப்புறம்தான் டாக்டர் பார்ப்பாராம்..?'
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

மொதல்ல நர்ஸ் செக் பண்ணுவாங்களாம். அப்புறம்தான் டாக்டர் பார்ப்பாராம்..?'

'என்ன வெயிட், பிரஷர் செக் பண்ணுவாங்க. அதானே..?'

'அதில்லைங்க.. பர்ஸில் எவ்வளவு பணம் இருக்குன்னு செக் பண்ணுவாங்களாம்...'

பண்ருட்டி பரமசிவம்



'இந்த சிஸ்டரால்தான் நான் உயிர் பிழைத்தேன்..?'

'எப்படி சார்..?'

'ஆபரேஷன் தியேட்டர் பின்பக்கக் கதவை யாருக்கும் தெரியாமல் திறந்துவிட்டுட்டாங்க?'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.



'நர்ஸம்மா.. ராத்திரி முழுக்க கொசுக்கடி ..'

'ஸ்பெஷல் வார்டுன்னு தெரியுமா?'

'எனக்கு தெரியும்மா.. உங்களைக் கடிச்ச கொசுவுக்கு தெரியாதே..?'

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

'நெட் மூலமா வியாதியைப் பற்றி தெரிஞ்சுக்க முடியுமா டாக்டர்..?'

'ஓ.. முடியுமே.. ஆனா அது எங்களைவிட அதிகமாகப் பயமுறுத்தும் தேவலையா..?'

ஏ.நாகராஜன், பம்மல்.



'டாக்டர்.. பஸ்ஸில் போகும்போது கொஞ்ச நேரத்தில் தூக்கம் வந்துவிடுது..?'

'பஸ்ஸில் தூங்குவது தப்பில்லையே.. நீங்க என்ன வேலை பார்க்கறீங்க'

'பஸ் டிரைவராக இருக்கேன்..'



'உங்க வாழ்க்கை எப்படி போகுது..?'

'முடி கொட்டுது, முதுகு வலிக்குது, சுகர் வந்துவிட்டது, இடுப்பு வலி.. இப்படியே போகுது...?'

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'டாக்டர்.. என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டுவது மாதிரி கனவு வருது?'

'இதுக்கு போய் வருத்தப்படுவாங்களா..?'

'ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை எட்டி உதைக்கிறாரே...?'

ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.



'என்ன டாக்டர்.. மூணு மருந்துச் சீட்டு தர்றீங்க?'

'இது அலோபதி, இது யுனானி, இது ஹோமியோபதி. எது தேவையோ அதைப் பயன்படுத்துங்க?'

அ.ரியாஸ், சேலம்.

'என்னால் தினமும் 4 கி.மீ. தூரம் நடக்க முடியாது.. டாக்டர்..'

'அப்படின்னா 2 கி.மீ. நடந்துப்போயிட்டு திரும்பி வந்துடுங்க..?'



'டாக்டர்.. மூணு நாள் எனக்கு குளிர் ஜூரம்..'

'மூணு நாளா சும்மாவா இருந்தீங்க?'

'இல்லை டாக்டர்.. நல்லா போர்த்திட்டுதான் இருந்தேன்...'

நெ.இராமகிருஷ்ணன், சென்னை.



'ஞாபக மறதி வியாதிக்கு உங்களை ஒருநாளைக்கு ஒரு மாத்திரைதானே சாப்பிட சொன்னேன். நீங்க ஏன் பத்து மாத்திரை சாப்பிட்டீங்க?'

'மாத்திரை சாப்பிட்டதையே மறந்து போய் சாப்பிட்டேன்.. டாக்டர்...'

வி.சாரதி டேச்சு, சென்னை 5.



'டாக்டர்... ரொம்ப சென்டிமென்ட் பேர்வழி போல...?'

'எப்படி சொல்றீங்க?'

'ஊசி குத்த ரெடியானப்போ.. யாரோ தும்மினதும் ஊசி வேண்டாமுன்னு மாத்திரை எழுதிக் கொடுத்திட்டாரே..?'

வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com