'பிக்கிள் பால்'

டேபிள் டென்னிஸை மேஜை இல்லாமல் அரங்கில் விளையாடுவதுதான் 'பிக்கிள் பால்'.
'பிக்கிள் பால்'
Published on
Updated on
1 min read

டேபிள் டென்னிஸை மேஜை இல்லாமல் அரங்கில் விளையாடுவதுதான் 'பிக்கிள் பால்'. சென்னை, கோவை மாநகரங்களில் பிரபலமாகிவரும் இந்த விளையாட்டு ஒற்றையர், இரட்டையர், கலப்பு பாலினமாக ஆடக்கூடியது.

டேபிள் டென்னிஸில் பந்தை அடிக்கப் பயன்படுத்தப்படும் ராக்கெட்டைவிட சற்றுப் பெரிதாக 'பிக்கிள் பால்' ராக்கெட் அமைந்திருக்கும். இருபுறமும் மென்மையான ரப்பர் துண்டு ஒட்டப்பட்டிருக்கும். பந்து அளவு லேபிள் டென்னிஸ் பந்தைவிட சற்று பெரிதாக இருக்கும். பந்தில் துளையிடப்பட்டிருக்கும். 'பிக்கிள் பால்' திறந்த மைதானத்திலும் அரங்கிற்குள்ளும் ஆடலாம்.

'பிக்கிள் பால்' 1965-இல் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள பெயின்பிரிட்ஜ் தீவில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. 2022-இல் 'பிக்கிள் பால்' வாஷிங்டனின் அதிகாரபூர்வ மாநில விளையாட்டாக அறிவிக்கப்பட்டது. டென்னிஸ், இறகுப் பந்தாட்டம், டேபிள் டென்னிஸ் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையாகும்.

அமெரிக்காவுக்கு வெளியேயும் 'பிக்கிள் பால்' பிரபலமடைந்து இந்தியாவுக்குள்ளும் பிரபலமாகி வருகிறது. சென்னையில் முதல் முறையாக 2025 தொடக்கத்தில் 'பிக்கிள் பால்' அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றன.

கோவையிலும் இது மாதிரியான லீக் போட்டிகள் நடக்கின்றன. கோவை, ஈரோடு, திருப்பூர் சேலத்தைச் சேர்ந்த வீரர் மொத்தம் 70 அணிகள்,போட்டியில் கலந்து கொண்டுள்ளன. நடிகை சமந்தா 'பிக்கிள் பால்' விளையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com