இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலா!

'இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலா'வை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜார்க்கண்ட் தனது சுற்றுலாத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை இணைத்துள்ளது.
இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலா!
Published on
Updated on
1 min read

'இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலா'வை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜார்க்கண்ட் தனது சுற்றுலாத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை இணைத்துள்ளது. இதற்காக ஜார்க்கண்ட் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்துடன் ஐந்து ஆண்டுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

பார்சிலோனாவில் உள்ள 'காவா' சுரங்க அருங்காட்சியகத்துக்கு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சோரன் அண்மையில் சென்று வந்ததன் விளைவாக, சுரங்க சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலமானது இயற்கை அழகில் இளைப்பாறும் மாநிலம். அதே சமயம், விலைமதிப்பற்ற கனிம வளங்களுக்கும் பெயர் போனது.

ஒருபக்கம் பள்ளத்தாக்குகள், வனப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகளை ஜார்க்கண்ட் அரசு அழைத்தாலும் மாநிலத்தில் அமைந்த சுரங்கங்களையும் சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்க முடிவு செய்துள்ளது. உள்ளூர் கனிமத் தொழில்கள், இயற்கை வளங்களின் பாரம்பரியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சுற்றுலா முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த கனிம வளத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் ஜார்க்கண்டில் உள்ளன. சுற்றுலாவை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், ஜார்க்கண்ட் தயாராகிவிட்டது.

இதுவரை 'சுரங்கங்களுடன் தொடர்பு உடையவர்கள் மட்டும் சுரங்கங்களுக்குச் சென்றுவரலாம்' என்ற நிலை மாறி, சுற்றுலாப் பயணிகள் முதல் சாதாரண குடிமகனும் சுரங்கங்

களைப் பார்வையிட்டு 'சுரங்கங்கள் எப்படி இருக்கும், எப்படி கனிமங்களை வெட்டி எடுக்கிறார்கள், வெளியே கொண்டுவருகிறார்கள், சுரங்கத் தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல் நெறிமுறைகள், சுரங்கத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை' முதலியவற்றை நேரில் கண்டு புரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com