சிரி... சிரி...

என்னடி... உன் வீட்டுக்காரர் ஒர்க் ஃப்ரம் ஹோமுன்னு சொன்னே.. எப்போதும் படுக்கையிலேயே படுத்துத்தூங்குறாரே..?''
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

என்னடி... உன் வீட்டுக்காரர் ஒர்க் ஃப்ரம் ஹோமுன்னு சொன்னே.. எப்போதும் படுக்கையிலேயே படுத்துத்தூங்குறாரே..?''

ஆமாம்டி. இதுவும் ஒர்க் ஃப்ரம் ஹோம்தானே...!''

கீதா சீனிவாசன், சென்னை63.



மாமியார் வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்தப்போ நீ சிரிச்சிட்டியா? உன் கணவர் திட்டலை..?''

டி.வி. சீரியலில் வர்ற மாமியார் விழுந்தப்போ தானே சிரிச்சேன்...!''

ஈனோஸ் இப்ராஹீம், சென்னை.



நானும் எங்க மாமியாரும் சீரியலில் வர்ற மாதிரி இருப்போம்..!''

எப்படிடி?''

ஓயாமல் சண்டை போட்டுட்டே...!''



உன் எதிர்வீட்டுக்காரி அவ மகள் கல்யாணத்தைச் சிக்கனமா நடத்தினாளே... எப்படி இருந்துச்சி..?''

விருந்தில் மினி மீல்ஸ் போட்டாங்க!''

பர்வீன் யூனூஸ், சென்னை.



என் மருமகள் ஒரு கிரிக்கெட் பைத்தியம்...!''

அப்படியா?''

ஆமாம்... எங்க ரெண்டு பேர் சண்டைக்கு ஒரு கிரிக்கெட் அம்பயரை கூப்பிடுவாள்னா பார்த்துக்கோ..!''



உனக்குப் பிடிச்சதுதான் உன் மாமியாருக்கும் பிடிக்குமா?''

ஆமாம்... சண்டை, சீரியல், அக்கம்பக்கம் வீட்டு சமாசாரங்கள்...!''

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.



நான் சோஷியல் மீடியாவுக்கு அடிமையாயிட்டேன்னு அந்த டாக்டரிடம் சொன்னேன்...''

என்ன சொன்னாருடி...?''

அவரின் ஐ.டி.யைக் கொடுத்து ஃபாலோ பண்ணச் சொன்னாரு...!''

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



ஜோக் சொல்றீயே... கேட்டுட்டு உன் வேலைக்காரி ஏன் சிரிக்காம மாடு மாதிரி நிற்கறா...?''

அப்புறமா அசை போட்டுச் சிரிப்பாள்...''

ஏ.நாகராஜன், பம்மல்.



என்னடி ஆச்சி... வாடி வதங்கி வர்றே..?''

ஆடி மாசம்ல வேப்பிலை வீச்சு அதிகம்...''

பர்வதவர்த்தினி, பம்மல்.



புதுசா வந்த வேலைக்காரியை ஏன்டி அதுக்குள்ளே நிறுத்திட்டே?''

வாயைப் பிடுங்கினாலும் ஒரு வீட்டு வம்பையும் சொல்ல மாட்டேங்குறாளே!''



என் புருஷன் இனி வேலைக்காரியை சீண்ட முடியாதபடி பண்ணிட்டேன்டி...''

எப்படி?''

என்னோட பத்துப் புடவைகளைக் கொடுத்து, டெய்லி இதுல ஏதாவது ஒன்னை மாத்தி, மாத்திக் கட்டிட்டு வேலைக்கு வர்றணும்னு சொல்லிட்டேன்..''



பொண்ணு பார்க்க வந்தவங்க ரொம்ப வெளிப்படையா இருக்காங்க...''

எப்படிச் சொல்றே?''

சொஜ்ஜி, பஜ்ஜி சூப்பரா இருக்கு... வேணும்னா ரெண்டாம்தரம் கேளுங்கன்னு மனசுல வைக்காமக் கேட்டுட்டாங்களே..!''

வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com