ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எலும்புகளில் கால்சியம் சத்து அதிகரிக்க வழி என்ன?

எனக்கு வயது முப்பத்து ஆறு. எலும்புகளில் கால்சியம் சத்து குறைவாகவும், பொட்டாசியம் சத்து ரத்தத்தில் அதிகமாகவும் உள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எலும்புகளில் கால்சியம் சத்து அதிகரிக்க வழி என்ன?
Published on
Updated on
1 min read

எனக்கு வயது முப்பத்து ஆறு. எலும்புகளில் கால்சியம் சத்து குறைவாகவும், பொட்டாசியம் சத்து ரத்தத்தில் அதிகமாகவும் உள்ளது. கால்சியம் அதிகரித்து, பொட்டாசியம் குறைக்கும் ஆயுர்வேத அணுகுமுறைகளைக் குறிப்பிடவும்.

-வசந்தா, கோவை.

உடலில் தாது சமநிலை மிகவும் முக்கியமானது. அதில், 'அஸ்தி தாது' எனும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், வலிமைக்கும் பிரதான அங்கமாக 'கால்சியம்' பொறுப்பு வகிக்கிறது. அதேசமயம் பொட்டாசியம் அதிகரிப்பு உடலில் பித்தம், வாதம் தொடர்பான பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடும். உடல் சீர்குலைவைச் சரிசெய்ய ஆயுர்வேதம் உணவு, மருந்து, வாழ்க்கை முறைகள் என மூன்று அடிப்படைகளில் சிகிச்சை கூறுகிறது.

கால்சியம் அதிகரிக்க வேண்டிய உணவுப் பரிந்துரைகள்:

பால், தயிர் குறிப்பாக எருமைப்பால் கால்சியம் நிறைந்தது.

எள்ளு, நல்லெண்ணெய் ஆகியன உடலுக்கு இயற்கையான கால்சியம் தரக் கூடியவை. எள்ளு பொடி சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு வெதுவெதுப்பாகச் சாப்பிடவும்.

முருங்கைக் கீரை, முருங்கைக்காய் எலும்பை வலுப்படுத்தும்.

சிறுகீரை, அரைக்கீரை, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பாதாம், வால்நட், முந்திரி ஆகியவற்றை குறைந்த அளவில் சாப்பிடலாம்.

நாட்டுக்கல் சுண்ணாம்பை சிறிய அளவில் மருத்துவர்கள் ஆலோசனையின்படி பயன்படுத்தலாம்.

ஆயுர்வேத மருந்துகள்:

'அஸ்திசம்ஹாரி' எனும் பிரண்டை சேர்த்துத் தயாரிக்கக் கூடியவை. எலும்புமுறிவு, பலவீனம் குறைக்கும்.

பிரவாளபஸ்மம்- இயற்கை கால்சியம்.

சங்கபஸ்மம்- பல்லும், எலும்பும் வலுப்படும்.

பொட்டாசியம் குறைக்க வேண்டிய வழிகள்:

தவிர்க்க வேண்டிய உணவுகள்: வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், தக்காளி, சுரைக்காய், கறிகாய்களைத் தண்ணீரில் நன்கு வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி விட்டுச் சமைத்து உண்பது நல்லது.

தேங்காய் நீர்- இளநீர், உலர்திராட்சை, பேரீச்சம், அவோகோடா- அதிக பொட்டாசியம்.

பயன்படுத்த வேண்டிய உணவுகள்:

வெள்ளை அரிசி, அரிசி கஞ்சி- குறைந்த பொட்டாசியம்.

சேனைக்கிழங்கு, பூசணி, பைனாப்பிள், செரி, ஸ்ட்ராபெரி- சிறந்தத் தேர்வு.

ஆயுர்வேத மருந்துகள்:

பொட்டாசியம் அதிகரிப்பால் ஏற்படும் வீக்கம், உடல் சோர்வு, சிறுநீரகக் கஷ்டங்களுக்கு சிறுநீரை வெளியேற்றும் மூலிகைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

புனர்நவா (மூக்கிரட்டை)- புனர்நவாஸவம், புனர்நவாதி கஷாயம்.

கோகிலாக்ஷம் கஷாயம்.

கோக்க்ஷீரா (நெருஞ்சில் ) விதை,

வாழ்க்கை முறை வழிகாட்டல்கள்:

சூரிய ஒளி- காலை 6-8 மணி வரையுள்ள நேரத்தில் பதினைந்து நிமிடங்கள் உடலில் சூரியக் கதிர்கள் பட்டால் வைட்டமின் டி

சுரந்து கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவும்.

மிதமான உடற்பயிற்சியானது எலும்பு வலுவை அதிகரிக்கும்.

உப்பு, பழுப்பு சர்க்கரை, அதிக பழங்களைக் குறைக்க வேண்டும்.

தினமும் போதுமான தூக்கம் தாது சமநிலைக்கு அவசியம்.

நெல்லிக்காய் சிறிது வென்னீரில் போட்டு பசுமை மறைந்து வெண்ணிறம் அடைந்து, சிறிது வெந்ததும் இறக்கவும். விதை நீக்கி உலர்த்திக் கொள்வது 'பால்முள்ளி' எனப் பெயர். இது ருசி தரும். மலத்தை இறுகவிடாது. குடல் மற்றும் உடல்உள்புறக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும். நுரையீரலை வலுவாக்கி இருமல், சளி வராமல் பாதுகாக்கும். இதயத்துக்கும் பலம் தந்து தலைசுற்றுதல், களைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் உடலில் சேர உதவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com