சிரி... சிரி...

உடம்பைக் குறைக்கணும் டாக்டர்...
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'உடம்பைக் குறைக்கணும் டாக்டர்...'

'இரவு ரெண்டு சப்பாத்தி மட்டும் சாப்பிடுங்க!'

'அது சாப்பாட்டுக்கு முந்தியா?, பிந்தியா டாக்டர்...?'

-க.நாகமுத்து, திண்டுக்கல்.



'நீங்க தினமும் நடக்கணும்...'

'எங்க ஏரியாவுல நாய் தொல்லை ஜாஸ்தி டாக்டர்...'

'அப்போ தினமும் ஓடுங்க...'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'ஏன் இப்படி அடிபட்டு வந்தீங்க?'

'ஆமாம் டாக்டர்... உங்கக்கிட்ட வந்து கட்டு போட்டுக்கவே...!'

-பர்வதவர்த்தினி, பம்மல்.



'கதவைச் சாத்தி திறக்கும்போது இவர் 'க்ரீச்'னு சத்தம் போடுறார் டாக்டர்...'

'கதவு என்ன சவுன்ட் போடுது...?'

'இவர் போடுற சத்தத்தில் அது சரியா காதில் கேட்கலை...'

-ஏ.நாகராஜன், பம்மல்.



'நேத்து நைட்டு 12 மணிக்கு எதுக்கு பிரட் எடுத்துச் சாப்பிட்டீங்க?'

'நர்ஸம்மா... நேத்து 12 மணியோட அந்த பிரட் எக்ஸ்பயரி ஆச்சு. அதான்...'

-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

'நீங்க பீஸை தரவே வேணாம்.'

'ஏன் டாக்டர்...?'

'வரும்போது எல்லாம் எனக்கு ரெண்டு பேரை அறிமுகம் செஞ்சி வைக்கிறீங்களே...'



'பீஸ் குறையாதா டாக்டர்...?'

'குறையும். நீங்க நிறைய சந்தேகங்களைக் கேட்காமல் இருந்தால்...'



'மத்தவங்க மாதிரி நீங்க ஏன் மருந்துகளை ஆடித் தள்ளுபடியில் கொடுக்கக் கூடாது...?'

'தரலாம்.. ஆனா, காலாவதியான மருந்து, மாத்திரைகளைத்தான் நீங்க வாங்குவீங்க!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'தூக்கத்துல தினமும் என் ஹஸ்பெண்ட் ஒரே பேத்தலா பேத்தறாரு... டாக்டர்!'

'முழிச்சிட்டிருக்கும்போது பேத்தாமல் இருக்காருல்ல?'

'பகல் முழுக்க வாயே திறக்க மாட்டாரே... '



'குளிர் ஜுரமுன்னு அட்மிட் ஆனவரு.. நர்ஸ்கிட்ட கடலை போட ஆடம்பிச்சிட்டாரே?'

'குளிர்விட்டு போயிருக்கும்...'



'நான் இப்போ ஆபரேஷன் தியேட்டரில் முக்கியமான ஆபரேஷனில் இருக்கேன். அப்

புறமா பேசறேன்மா...?'

'நானும் ஆபரேஷன் தியேட்டரில்தான் இருக்கேன். உங்களுக்குப் பின்னால் மூன்றாவது வரிசையில் பாருங்க!'



'தூக்கத்துல என் புருஷன் சத்தமா சிரிக்கிறாரு டாக்டர்...'

'சிரிச்சிட்டு போறாரு... அதுல உனக்கென்னம்மா கஷ்டம்?'

'என்னைப் பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கே... டாக்டர்...'



'நர்ஸ்... என்னோட ஸ்டெத்தாஸ்கோப் கடைசியில எங்கம்மா இருந்திச்சி...?'

'என்னோட கழுத்தில்தான் டாக்டர்...'



'அந்த நோயாளி ரொம்ப விஷமம்டி...'

'ஏன் அப்படிச் சொல்றே...?'

'பாவம்னு நினைச்சு வாயில் மாத்திரையைப் போட்டா, விரலைச் செல்லமா கடிக்கிறான்டி...'



'இப்போவெல்லாம் ஞாபக மறதி அதிகமாச்சு டாக்டர்...'

'டோக்கனை குடுக்க மறந்துட்டீங்களா?'

'இல்லை... டோக்கனை எடுத்துப் போய் டீக் கடையில் டீ கேட்டுட்டேன்...'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com