சிரி... சிரி...

என்ன சார்... இட்லி வட்டமாய் இருக்கும். நீங்களோ சதுரமாய் கேக்கறீங்க?
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

என்ன சார்... இட்லி வட்டமாய் இருக்கும். நீங்களோ சதுரமாய் கேக்கறீங்க?

'என் ராசிக்கு வட்டம் ஒத்துவராதுப்பா... அதனால்தான்!'

-எம்.பி.தினேஷ், கோவை-25.



'விருந்தாளி சார்... ஒரு வேண்டுகோள்...'

'என்ன?'

'நீங்களாவே வந்து நீங்களாவே ஒரு மாசம் டென்ட் அடிச்சிட்டு மளிகைச் சாமான்களை காலி பண்ணீட்டிங்க... நீங்களே கிளம்பிடக் கூடாதா?'

-பர்வதவர்த்தினி, பம்மல்.

'என்னப்பா சர்வர் இது... பேப்பர் ரோஸ்ட் ஓரமா கிழிஞ்சி இருக்கே?'

'நான்தான் சார் பில் எழுதக் கிழிச்சேன்...'

-க.நாகமுத்து, திண்டுக்கல்.



'ஏங்க நம் ஏரியாவுல முதியோர் இல்லம் எங்கே இருக்கு?'

'ஏன் அவங்களுக்கு ஏதாவது சமைச்சுக் கொண்டு போய்க் குடுக்கப் போறீயா?'

'இல்லீங்க... உங்களை அங்கே சேர்த்துட்டு வரலாமுன்னு கேக்கறேன்!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'எதுக்காக உன் கணவர் 'நொய்', 'நொய்'னு முணுமுணுத்துக்கிட்டே சாப்பிடுறார்?'

'அவர் சாப்பிடுற பருப்புச் சாதத்தில் நெய் ஊத்தலையாம்!'

-கே.ஜி.எஃப்.விசாகன், கிழக்கு தாம்பரம்.

'பேமிலி தோசை கேட்டுட்டு பாதியாக வெட்டி கேட்கறீங்களே... ஏன்?'

'சாப்பிட வந்திருக்கிறது நானும், என் மாமியாரும்தான்!'



'என் மாமியார் கையால் சாப்பிட்டுட்டு, இப்போ நானே சமைச்சு சாப்பிட என்னால் முடியலை!'

'அப்புறம் எதுக்குடி அவசரப்பட்டு அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டே?'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.



'ஏம்பா... நெய் பொங்கல் வெச்சியே... அதுல நெய் வாசனையே இல்லையே?'

'நொய் பொங்கலுன்னு சொன்னது... உங்களுக்கு நெய் பொங்கலுன்னு விழுந்திருக்கு சார்...'



'எந்த வேலையைச் சொன்னாலும் 'சப்பை மேட்டர் சார் அது'ன்னு சொல்றாறே... எதுக்கு?'

'சப்பை பாட்டிலுக்கு அடி போடறாரு அவரு!'



'ராட்சத அரிசி மில் தலைவரிடம் இருக்கு!'

'அதான் எதிர்க்கட்சியினரின் திட்டங்களைத் தவிடு

பொடியாக்குவோம்னு சொல்றாரா?'



'நீதான் எதுவுமே சாப்பிடலையே... அப்புறம் எதுக்கு மாவாட்டட்டுமான்னு கேக்குறே?'

'சாப்பிட்டவுடன் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது முதலாளி, அதான்!'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com