

தென்மேற்கு சீனாவின் ஜின்சுன் கிராமத்தில் உள்ள குகைக்குள் கூடைப்பந்து மைதானம் கட்டப்பட்டுள்ளது. இது 28 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் உள்பட மொத்தம் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.
இந்த இடம் கூடைப்பந்து பயிற்சிக்கான தளமாக மட்டுமல்லாமல், நகரத்தின் மிக முக்கியமான திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான முதன்மை மேடையாகவும் செயல்படுகிறது.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்தப் பகுதியில் வானிலையைத் துல்லியமாகக் கணிக்க முடியாது. அடிக்கடி மழை பெய்யும்; வெயில் அரிதாகவே இருக்கும். அதனால் விளையாட்டு மட்டுமல்ல, முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வானிலையால் இடையூறு ஏற்படாதவண்ணம் நிரந்தர இடத்தைத் தேடினார்கள். இறுதியில் குகையைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
இங்கு ஆண்டு முழுவதும் எந்த இடையூறுமின்றி கூடைப் பந்தாட்டத்தை நடத்த முடிகிறது. அத்துடன் இந்தக் குகையில் ஆயிரம் பார்வையாளர்கள் வரை விளையாட்டைக் கண்டு களிக்கலாம். இங்கு வெப்பநிலை ஆண்டு முழுவதும் 15 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதால், இந்த இடம் ஓர் இயற்கை ஏர் கண்டிஷனாக செயல்படுகிறது.
இந்த அசாதாரணமான இடம் கிராமவாசிகளின் விளையாட்டு மீதான அசைக்க முடியாத அன்புக்குச் சான்றாக விளங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.