சிரி ... சிரி...

குழந்தைகளுக்கான ஜோக்ஸ்....
சிரி ... சிரி...
Updated on
1 min read

அந்தப் படத்துல ஏன் அடிக்கடி மதுக்கடைகளையும், மது அருந்தற காட்சிகளையும் காட்டிக்கிட்டே இருக்காங்க?'

'படத்துல சரக்கு இல்லைனு யாரும் சொல்லிடக் கூடாதாம்!'

****

'தினமும் காலையில 8 மணிக்கு டாண்னு எந்திரிச்சிடுவா என் மனைவி !'

'நீங்க தான் எழுப்பி விடுவீங்களா?'

'இல்ல.... என்னோட சமையல் வாசனையில முழிச்சிக்குவா!'

****

'நாடி சோதிடரை கண்டு மன்னர் பயந்து ஓடுகிறாரே, ஏன்?'

'அவர் கையில் வைத்திருந்த ஓலையைப் பார்த்து, 'போர் ஓலை' என்று நினைத்துவிட்டாராம்!'

****

'எதிர் வீட்டு மாப்பிள்ளையை ஆவி அடிச்சிடுச்சாம்...!'

'ஐயையோ... அவர் எங்கே போனாரு ?'

'ஆவி அடங்கறதுக்குள்ள குக்கர் மூடியைத் திறந்தாராம்!'

****

'தூக்கத்துல பயங்கரமா குறட்டை விடுறேன், டாக்டர்?'

'அதுல மத்தவங்க தூக்கம்தானே கெட்டுப் போகும்... உங்களுக்கென்ன கஷ்டம்?'

'அந்த சத்தத்துல நானே திடுக்கிட்டு முழிச்சுக்கிறேன், டாக்டர்!'

-வி.ரேவதி, தஞ்சை.

****

'என் அம்மாவைக் காணோமே?'

'உபயோகமில்லாததை எல்லாம் பரண் மேல வைக்கச் சொன்னீங்களே... உங்க அம்மாவையும் மேல வெச்சுட்டேன்!'

****

'உன் வீட்டில் உன்னை மாதிரியே ஒரு கட் அவுட் வச்சிருக்கீயே, எதுக்கு ?'

'கொசுவை ஏமாத்தத்தான்!'

-எம்.பி.தினேஷ், கோவை - 25.

****

'என்னப்பா... அவருக்கு மட்டும் காலண்டர் தர்றே?'

'பேப்பர் ரோஸ்ட்டுக்கு காலண்டர் ஃப்ரீ, சார்!'

****

'போருக்குப் போகும்போது எதுக்கு ஹெல்மெட், மன்னா?'

'போட்டுக்கிட்டு புறமுதுகிட்டு ஓடி வந்தா யாருக்கும் என்னை அடையாளமே தெரியாது, அமைச்சரே!'

-அ.ரியாஸ், சேலம்.

****

'உனக்கு மேரேஜ் லோன் கொடுத்த பேங்க் மேனேஜர் உன்னைத் திட்டி அனுப்பிட்டாரா, ஏன்?'

'இப்ப டைவர்ஸ் பண்ண லோன் கொடுங்கன்னு அவர்கிட்ட கேட்டேன்!'

****

'24 மணி நேரம் கழிச்சிதான் சொல்லமுடியும்!'

'ஏங்க, நான் உங்க ஒய்ப்... கிளினிக்ல இருந்து எப்ப வருவீங்கன்னு கேட்டாகூடவா இப்படிச் சொல்வீங்க?'

'................?'

-பர்வீன் யூனுஸ், சென்னை.

'பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு... குனிஞ்சு தலை நிமிரமாட்டான்னு சொன்னீங்களே... எப்போதான் நிமிர்ந்து பார்ப்பா?'

'வை ஃபை கனெக்சன் கட்டானால் நிமிர்ந்து பார்ப்பா!'

'உங்க கடையில் குளிக்கிற சோப்பு இருக்குதா?'

'கடையில் குளிக்க முடியாது.... சோப்பை வாங்கிக் கொண்டுபோய் வீட்டில் குளிக்கலாம்!'

'மன்னா! எதிரி நாட்டு மன்னன் நமக்கு பேஸ்புக்கில் ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருக்கிறார்...'

'அதை பிளாக் செய்து விட்டு ராணியை ஃபாலோ பண்ணுவோம்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

'அந்த டாக்டர் ஏன் சினிமா தியேட்டர்ல இருந்து பாதி படத்துல எழுந்து போய்ட்டாரு?'

'அவரோட பார்வை நேரம் முடிஞ்சு போச்சாம்!'

****

'என்ன சர்வரே, கீரை வடை இருபது ரூபாயா?'

'அப்படீன்னா, அரை கீரை வடை சாப்பிடுங்க சார்... பத்து ரூபாய் தான்!'

-தீபிகா சாரதி, சென்னை -5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com