வாட்ஸ்ஆப்பில் புதிய சேவைகள் அறிமுகமாகி உள்ளன. இணைய வழியில் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை என்றால், அந்த அழைப்பாளருக்கு உடனடியாக வாய்ஸ் அல்லது விடியோ தகவல் அனுப்பலாம். முன்பு அழைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு சாட் பகுதியை தேர்வு செய்து, தகவல் அனுப்ப வேண்டியிருந்தது.
வாய்ஸ் சாட்களின்போதே தங்களின் உணர்வுகளை பிரதிபளிக்கும் சிறு ஸ்டிக்கர்களை சாட்களுக்கு இடையூறு இல்லாமல் அனுப்பலாம்.
குழு விடியோ அழைப்புகளில் பேசுபவர்களை முன்னிலைப்படுத்தும் சேவையும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழுவில் யார் பேசுகிறார்கள் என்பதை உறுப்பினர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
மேலும், பண்டிகைக் காலங்கள் வருவதால், கட்டளைக்கு ஏற்ப படங்களை வெளிப்படுத்தும் செயற்கை நுண்ணறிவை வாட்ஸ்ஆப் மேம்படுத்தி உள்ளது. விடுமுறைக்கால வாழ்த்துகள், தேவைக்கேற்ப புகைப்படங்களை மெட்டா ஏ.ஐ. உதவியுடன் வாட்ஸ்ஆப்பிலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.
மேலும், புகைப்படத்தை வைத்து விடியோவாக உருவாக்கி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பகிரவும் போட்டோ அனிமேஷன் சேவையும் அறிமுகமாகி உள்ளது.
ஸ்டேட்டஸ்களில் கேள்விகளை இணைத்து, அதற்கு பயன்பாட்டாளர்கள் பதிலளிக்கும் சேவையும், வாட்ஸ்ஆப் சேனல் அட்மின்கள் பின்தொடர்பவர்களிடம் கருத்துகளைக் கேட்டு பெறும் சேவையும் அறிமுகமாகி உள்ளது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

