
வாஷிங்டன் தேசிய மிருகக் காட்சி சாலை, சான்டியூகோ மிருகக் காட்சி சாலை ஆகியவற்றுக்கு தலா இரு பான்டாக்கள் புதிய வரவாக அண்மையில் வருகை தந்துள்ளன.
சீன வனவிலங்கு பாதுகாப்புச் சங்கத்தின் கண்காணிப்பில் உள்ள பான்டாக்கள் ஆண்டுக்கு 1.1. மில்லியன் டாலர் வாடகையில் இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
'பான்டாக்களைப் புகைப்படம் எடுக்கக் கூடாது, அதன் செயல்பாடுகளை நேரடியாக காட்டக் கூடாது, மரணம்- வியாதிகளைப் பற்றி வெளியில் செல்லக் கூடாது, பான்டா சார்ந்த பிரச்னைகள் எழுந்தால் அவற்றை தங்களுக்கே தெரியப்படுத்தினால் தாங்களே ஆள்களை அனுப்பி குணப்படுத்துவோம், அவர்கள் வந்துச் செல்லவும் இதரச் செலவுகளையும் தர வேண்டும், ஒப்பந்தத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் ரத்து செய்து பான்டாக்களைத் திரும்ப அழைத்துகொள்வோம்...' என்று பல நிபந்தனைகள் உள்ளன.
'பான்டாக்கள் உள்ளதைக் கூறி, மக்களை வரவழைத்து வாடகைக்கு அளிக்கும் டாலர்களைத் திரும்ப எடுத்துவிடலாம்' என்ற நம்பிக்கை மிருகக் காட்சி சாலைகளுக்கு இருக்கிறது.
விலங்குகளை வைத்து, வியாபாரம் நடத்துவதில் சீன நாட்டுக்கு ஈடு இணை வேறெந்த நாடும் இல்லை.