திறமைக்கு மரியாதை..!

2025- 26-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on
Updated on
2 min read

2025- 26-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த சேலை வித்தியாசமானதாக இருந்தது.

தொடர்ந்து எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் பீகாரின் பாரம்பரிய கலைவடிவமான மதுபனி கலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட வெள்ளை நிறத்திலான சேலையை அணிந்திருந்தார். சிவப்பு ரவிக்கை, தங்க நிற பார்டர் கூடிய சேலை இது என்பதால், அனைவராலும் கவனிக்கப்பட்டது.

பீகாரில் உள்ள மதுபனியில் உள்ள மிதிலா கலை நிறுவனத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனுக்கு 2021-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி இந்தச் சேலையைப் பரிசாக வழங்கியதோடு, நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது இதனை உடுத்திக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

துலாரி தேவியின் தனித்துவமான திறமைக்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவரது வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாகவும் நிர்மலா சீதாராமன் இந்தச் சேலையை அணிந்துவந்திருந்தார்.

ஓவியப் பாரம்பரியம் இல்லாத மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த துலாரிதேவி, பிரபல மதுபனி கலைஞரான கற்பூரி தேவியிடம் பணிபுரிந்தபோது அந்தக் கலை மீதான ஆர்வம் அவரை தொற்றிக் கொண்டது.

இதற்கு முந்தைய நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்தபோது, நிர்மலா சீதாராமன் அணிந்துவந்த

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சேலைகள்:

2024-இல் நீலம், கிரீம் நிறம் கலந்த டஸ்ஸார் சேலையில் நிர்மலா வருகை புரிந்தார். இந்தச் சேலை முழுவதிலும் கிரீம் நிற காந்தா தையல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்கு வங்கம், ஒடிஸ்ஸா, திரிபுராவில் காந்தா சேலைகள் பாரம்பரியமாகக் காணப்படுகிறது . அந்தப் பகுதி பெண்களைப் பிரதிநிதித்துப்படுத்தும் விதமாக அவர்களின் பாரம்பரிய உடையான காந்தா தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சேலையை அணிந்திருந்தார்.

2023-இல் கருப்பு நிற பார்டர், தங்க நிற வேலைபாடு கொண்ட வெர்மில்லியன் சிவப்பு பட்டுச் சேலையை அணிந்திருந்தார் நிர்மலா. இந்தச் சேலையானது கர்நாடகாவின் தார்வாட் பகுதியைச் சேர்ந்த கையால் நெய்யப்பட்ட 'இல் கல்' பட்டுச் சேலையாகும். இந்தச் சேலையை நிர்மலா சீதாராமனுக்குஅப்போதைய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பரிசாக வழங்கியதாகும்.

2022-இல் கிழக்கிந்திய மாநிலமான ஒடிஸ்ஸாவிலிருந்து போம் காய் சேலையை நிர்மலா தேர்ந்தெடுத்தார். நெகிழ்ச்சி, நம்பகத்தன்மை, பாதுகாப்பைக் குறிக்கும் வகையில் மிக எளிமையான, மிருதுவான பழுப்பு நிற சேலையாக இது அமைந்திருந்தது. ஒடிஸ்ஸாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த போம்காய் கிராமத்தின் கைத்தறி சேலையாகும்.

2021-இல் தெலங்கானாவின் பிரபல போச்சம்பள்ளி பட்டு சேலையை நிர்மலா அணிந்திருந்தார். இந்தியாவின் பட்டு நகரத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக வெள்ளை நிற டிசைன், தங்க பார்டர் கொண்ட மிருதுவான , எளிமையான சிவப்பு மற்றும் வெள்ளை நிறச் சேலையாக அந்தச் சேலை அமைந்திருந்தது.

2020-இல் நீல நிற பார்டர் கொண்ட மஞ்சள் நிற பட்டுப் புடவையை நிர்மலா அணிந்திருந்தார். மஞ்சள் நிறம் செழிப்புடன் தொடர்பு கொண்டதால், அந்த ஆண்டு பொருளாதாரம் செழிப்பானதாக இருக்கும் என்று அடையாளப்படுத்தி நிர்மலா அணிந்து வந்தார்.

2019-இல் இளம் சிவப்பு நிற மங்களகிரி சேலையில் நிர்மலா வருகை தந்து, தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்தச் சேலையில் தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற டேப்லெட்டு பாஹிகட்டா வந்தார். இந்த வகை சேலைகள் ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரியில் நெசவு செய்யப்பட்டதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com