தேவையானவை:
சின்ன வெங்காயம் உரித்தது - 20
காய்ந்த மிளகாய் - 10
தக்காளி பழுத்தது - 3
கடலைப்பருப்பு, உளுந்து - தலா ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி
புளி - ஒரு கொட்டைப்பாக்கு அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடலைப் பருப்பு, உளுந்து, சீரகம், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சிறிது கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும்.