உலகில் உள்ள நாடுகள் சிலவற்றின் சிறப்பைப் பார்ப்போம். அவற்றை அறிந்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
எகிப்து
நைல் நதியின் ஆற்றங்கரை நாகரிகம் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. கி.மு. 6,000-ஆம் ஆண்டிலிருந்தே இந்த நாட்டில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1922-இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது.இரண்டு கண்டங்களில் இடம்பெற்றுள்ள அபூர்வ நாடுகளில் ஒன்று. பிரமிடுகள், பெரிய ஸ்பிங்கஸ் போன்றவை மூத்த நாகரிகத்தின் நினைவுச் சின்னங்களாக இன்றும் உள்ளன.
சீனா
நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்று. மஞ்சள் நதிப் படுகையை ஒட்டி கி.மு.3,500-இல் இருந்தே வாழ்க்கை இருந்துள்ளது. துப்பாக்கித் தூள், காகிதம் கண்டுபிடிப்பு, பட்டுப் பாதை, நீண்ட சுவர் என்பவை காலத்தின் சாதனைகள். 1978-இல் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சியை மேலும் உயர்த்தியது. சீன நாட்டின் கட்டடக் கலை பிரபலமானது. இங்கு 59 உலக பாரம்பரியத் தளங்கள் சீனாவின் பழைய நாகரிகத்துக்குச் சான்றாக உள்ளன.
சான் மரினோ
ஐரோப்பாவில் நாலு பக்கமும் நாடுகளால் சூழப்பட்ட குட்டி நாடு. ரோமானியப் பேரரசிடமிருந்து கி.பி. 301-இல் சுதந்திரம் பெற்றது.அன்றிலிருந்து இன்று வரை தனி நாடு. மரண தண்டனையை உலகில் ஒழித்த முதல் நாடு. பொருளாதாரம் வலுவானது என்பதால், பணக்கார நாடுகளில் ஒன்று.
கிரீஸ்
2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மிக பழமையான மனிதர்களின் எச்சங்கள் இங்குள்ளன. இலக்கிய இலியாட், ஒடிஸி. ஹோமரால் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆலிவ் மரங்கள் 7000 ஆண்டு வரலாற்றை சொல்கின்றன. முதல் உலக ஒலிம்பிக் போட்டி கி.மு. 700-இல் நடந்துள்ளது. பல நகரங்களில் அழிவுச் சின்னங்களை இன்றும் காணலாம்.
எதியோப்பியா
3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மனிதர்கள் வாழ்ந்துள்ளதற்கு ஆதாரமாக புதை எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்குள்ள பேல் மலைகளில் மக்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக எரிந்த அடுப்பு, கல் ஆயுதங்கள், மிருகங்களின் எலும்புக் கூடுகள் ,
மனித எலும்புகள் கிடைத்துள்ளன. 'அடஸ்அபாபா' தான் இதன் தலைநகரம்.
ஜப்பான்
கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு.
38 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 36,000 ) ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வந்து குடியேறியுள்ளனர். இது ஜப்பானின் கற்காலமாக கருதப்படுகிறது. கி.மு 14,500-இல் பயன்படுத்தப்பட்ட களிமண் பாத்திரங்கள் கருவிகள் கள ஆய்வில் கிடைத்துள்ளன. ஜப்பானுக்கு பசிபிக் கடற்கறையையொட்டி, 14,125 தீவுகள் உள்ளன. 29,751 கி.மீ. கடற்கரையை ஜப்பான் கொண்டுள்ளது. இங்கு நில நடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு சகஜம். 1923-இல் நடைபெற்ற ஒரு நில நடுக்கத்தில் 1.40 லட்சம் பேர் இறந்தனர். வளர்ச்சி மற்றொரு பக்கம் என்றென்றும் தொடருகிறது.
ஈரான்
கி.மு 4000-இல் இருந்தே உலகின் மிக பழமையான தொடர்ச்சியான முக்கிய நாகரிக நாடுகளில் ஒன்றாக உள்ளது. பெர்சியர்கள் உலகின் முதல் வரலாற்று மக்கள் என அழைக்கப் படுகின்றனர்.
கி.மு. 625-இல் இருந்தே ஒரே தேச நாடாகவும் பேரரசாகவும் இருந்து வருகிறது. அந்தக் காலத்திலேயே இது வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியாவில் பரவியிருந்தது. கட்டடக் கலை, கலாசாரம் போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் இன்றும் அங்கு கி.மு. கால கட்டடங்களையும் நினைவுச் சின்னங்களையும் காணலாம்.
ஏமன் குடியரசு
அரேபிய தீப கர்ப்பத்தில் இரண்டாவது பெரிய நாடு. தெற்கு அரேபியாவில் உள்ள இந்த நாட்டின் தலைநகரம் சனா.
பெரும்பாலும் அரபு முஸ்லிம்கள். இருப்பிடம் சார்ந்து 7 ஆயிரம் ஆண்டுகளாக பல நாகரிகங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. ஏழ்மையான நாடுகளில் ஒன்று. நான்கு யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்கள் உள்ளன. உலகின் சிறந்த சர்ஃபிங் விளையாட்டுத் தளமாக சொகோட்ரா இங்குள்ளது. நாட்டிலுள்ள தாவரங்களில் 37 சதவீதம் உலகில் வேறு எங்கும் கிடையாது. 253 வகையானபவளப் பாறைகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.