தென் பசிபிக்கின் சொர்க்கம்...

தென் பசிபிக் கடலின் ஓசியானாவின் ஒரு பகுதியான மெலனேசியாவில் உள்ள பிஜி நாட்டில் உள்ள 330க்கும் மேற்பட்ட தீவுகளில், 110 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
தென் பசிபிக்கின் சொர்க்கம்...
Published on
Updated on
1 min read

தென் பசிபிக் கடலின் ஓசியானாவின் ஒரு பகுதியான மெலனேசியாவில் உள்ள பிஜி நாட்டில் உள்ள 330க்கும் மேற்பட்ட தீவுகளில், 110 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். படிகத் தெளிவான நீர், பசுமையான நிலப்பரப்பு, நீர் விளையாட்டுகள் என இருப்பதால் 'தென் பசிபிக்கின் சொர்க்கம்' என இதனை அழைக்கின்றனர்.

'பிஜி தீவுகள்' 1970இல் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்று, 1987இல் குடியரசு நாடானது. தலைநகரம் சுவாவில். இங்கு சர்வதேச விமானத் தளமும் உள்ளது. இந்தியாவிலிருந்து நேராக அங்கு சென்றுதான் இறங்க வேண்டும். சர்க்கரை, கரும்புக்கு மிகவும் பிரபலம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து ஆள்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். இதனால் இன்று அங்கு வாழும் மொத்த மக்கள்தொகையில் 37.5 சதவீதம் பேர் பிஜி இந்தியர்கள்தான். குறிப்பாக, பெரும்பாலானோர் தமிழர்கள். இவர்களில் 27.8 சதவீதம் பேர் ஹிந்துக்கள். இங்குள்ள சிவ சுப்ரமணியா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ஜனவரியில் இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழாவுக்கு அண்டை நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

வனப் பகுதிகள், கனிமங்கள், மீன் வளம் கொண்ட நாடு. இங்குள்ள பவழப் பாறைகள் அற்புதமாய் காட்சி அளிக்கும். சாகச விளையாட்டுகளுக்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஸ்நோர் கெல்லிங், கயாக்கிங், ஆழ்கடல் டைவிங், ராஃப்டிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்கு மிகவும் பிரபலம்.

தலைநகரம் சுவாவில் பரந்த நீல நீர் , தங்க மணல் கடற்கரைக்கு மிக பிரபலம். தாவோரா நீர்வீழ்ச்சியைப் பார்க்க ரம்மியமாக இருக்கும்.

சபெட்டோ சுடு நீர் களிமண் குளம் மிக விரும்பி செல்லும் இடம். மருத்துவக் குணங்கள் கொண்ட இந்த மண்ணை பூசிக் கொண்டால், நோய் எதிர்ப்புச் சக்தி கூடும் என்பது மக்களின் நம்பிக்கை.

பயணத்துக்கு ஜூன் முதல் அக்டோபர் வரை சிறந்த காலம். அதிக கூட்டம் இருக்கும். ஆனால் சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கும்.

இங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்.

சவுசாவு:

அழகான ஸ்படிக நீர் கொண்ட கடற்கரை. இயற்கை முத்துகளை தேடியோ, வாங்கியோ நாம் எடுத்து வரலாம்.

நாவலா கிராமம்: மேட்டு நிலத்தில் ஒதுங்கியுள்ளது. அதனால் நிறைய பேர் செல்வதில்லை. அதனால் சுத்தமாக இருக்கும்.

பசிபிக் துறைமுக கடற்கரை: மிதமான நெரிசல் கொண்டது. பார்க்க மிக அழகாய் இருக்கும்.

விடிலெவு தீவு:

பெரிய அல்லி மலர் குளங்கள். சபேடா மலைத் தொடர், தாவரவியல் பூங்கா, மயக்கும் கடற்கரைகள் கொண்டது.

சுவா நீர்முனை:

தலைநகரில் அமைந்துள்ள சுவா வாட்டர் பிரென்ட். அதன் சுத்தமான, நன்கு பராமரிக்கப்படும் தோட்டங்களுக்கு பிரபலம்.

மாமனுக்காஸ்:

ஹெலிகாப்டரில் சென்று காண வேண்டிய தனித்துவமான தீவு. பறவைக் காட்சிகளைத் தரிசிக்க சிறந்த இடம். 'காஸ்ட் வே' என்ற ஆங்கிலப் படம் இங்குதான் படமாக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் பிரபலமாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com