டார்லிங்... கல்யாணமான பிறகும் நாம் காதலர்களாகவே இருப்போம்...'
'படகு மறைவில்தான் உட்காரணும்னு சொல்ல மாட்டீங்களே.. டியர்...'
ஈனோஸ் இப்ராஹீம், சென்னை.
'நேத்து நானும், நீயும் ஐஸ்கிரீம் சாப்பிடுறதை பார்த்த உன் அப்பா என்ன சொன்னாரு.. டார்லிங்....'
'சளி பிடித்தால் அவனையே டாக்டரிடம் கூட்டி போக சொல்லுன்னு திட்டினார்...'
அ.ரியாஸ், சேலம்.
'கட்டின புடவையோட உங்க பின்னாடி வர்ற தயார்...'
'உன்கிட்ட ஒரேயொரு புடவை இருக்கிற விஷயம் எனக்கு தெரியுமே...'
தீபிகா சாரதி, சென்னை.
'நம்ம லவ் மேட்டர் வீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு டியர்...'
'அய்யய்யோ என்ன சொன்னாங்க டார்லிங்...'
'அந்த இளிச்சவாயனை விட்டுடாதே.. மடக்கிப் போடுன்னு சொன்னாங்க..?'
'டியர்... நம்ம லவ் மேட்டர் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சிடுச்சி...'
'என்ன சொன்னங்க...'
'இவனுக்கு எப்போ அல்வா கொடுக்கப் போறேன்னு சொன்னாங்க...'
'டார்லிங்.. உனக்காக என் உயிரையே கொடுப்பேன்...'
'மொதலில் சுண்டல் பாக்கியைக் கொடுங்க.. மானம் போகுது...'
-பர்வீன் யூனூஸ், சென்னை.
'நாம எதற்காக இப்படி ஆசையாய் மனம் ஒன்றி லவ் பண்றோம்...'
'கல்யாணம் முடிந்து சண்டை போட்டுக்கத்தான்...'
'மனசுக்குள் என்ன இருக்கு...?'
'ஆயிரம் இருக்கு உனக்கென்ன..?'
'அந்த ஆயிரத்தை என்கிட்ட கொடு.. வாங்கிட்டு ஓடுறேன்...'
பர்வதவர்த்தினி, பல்லாவரம்.
'நீதான் என்னை லவ் பண்றீயே.. அப்புறம் ஏன் என்கூட பைக்கில் வர பயப்படுறே..?'
'நான் அடுத்த வீட்டுல வாழப்போற பொண்ணுடா.. அதான்....'
'மச்சான்.. எனக்கும் என் லவ்வருக்கும் கல்யாணமாகி குழந்தை, குட்டிகளோட வாழ்க்கை சந்தோஷமா போய்கிட்டே இருந்தது...'
'அப்புறம் என்னசாச்சு....'
'எங்க அம்மாவோ, விடிஞ்சு போச்சு போய் பால் வாங்கிட்டு வான்னு எழுப்பி விட்டுட்டாங்க..?'
'நம்ம டாக்டர் நர்ûஸ கல்யாணம் பண்ணிக்கிட்டு ஏன் வருத்தப்படுறாரு...?'
'பழக்கத் தோஷத்துல மனைவியை சிஸ்டருன்னு கூப்பிடுறாராம்...'
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.