முதல் பறக்கும் மின்சார விமானம்...

முதல் பறக்கும் மின்சார விமானம்...

உலகின் முதல் மின்சார விமானம் பறப்பதற்குத் தயார். நான்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு 130 கி.மீ. பறக்க ஆகும் செலவு 700 ரூபாய் தான்.
Published on

உலகின் முதல் மின்சார விமானம் பறப்பதற்குத் தயார். நான்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு 130 கி.மீ. பறக்கஆகும் செலவு 700 ரூபாய் தான். அதாவது ஒரு ஆளுக்கு 175 ரூபாய் மட்டுமே.

பீட்டா டெக்னாலஜிஸின் 'ஆலியா சி.எக்ஸ். 300' பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் முழு மின்சார விமானமாக சாதனை புரிந்துள்ளது. அமெரிக்காவின் இந்தக் கண்டுபிடிப்பு எதிர்கால விமானப் பயணத்துக்கு உத்திரவாதம் கொடுக்கிறது.

கிழக்கு ஹாம்ப்டனில் இருந்து நியூயார்க்கின் விமான நிலையம் சென்றடைய இந்த மின் விமானம் 30 நிமிடங்கள் எடுத்துகொண்டது. இதே தூரம் செல்ல ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினால் சுமார் 13 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

வெர்மான்ட்டை தளமாகக் கொண்ட பீட்டா டெக்னாலஜிஸ், 2017 முதல் மின்சார விமானத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மின் விமானம் பறக்க அனைத்து அனுமதியும் கிடைத்துவிடும்.

மின் விமானம் ஒரே சார்ஜில் 250 கடல் மைல்கள் (சுமார் 463 கி.மீ,) வரை பறக்க முடியும். டாக்சி, ஆட்டோக்களுக்குப் போட்டியாளராக மின் விமான டாக்சியாக மாறும். இந்த ஏர் டாக்சி செங்குத்தாகக் கிளம்பும் தரை இறங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com