சோஹாரி இலையில் தொடரும் பாரம்பரியம்

தென் அமெரிக்காவை சேர்ந்த கரிபியன் நாடு டிரினிடாட் டொபேகோ.
சோஹாரி இலையில் தொடரும் பாரம்பரியம்
Published on
Updated on
2 min read

திவ்யா

தென் அமெரிக்காவை சேர்ந்த கரிபியன் நாடு டிரினிடாட் டொபேகோ.

அன்மையில் இந்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தபோது அந்நாட்டின் அதிபரும், பிரதமரும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர். பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்úஸஸரால் அளிக்கப்பட்ட விருந்தில் உணவு பரிமாறும் போது ஓர் இலையைப் பயன்படுத்தினர். அந்த இலைக்கு சோஹாரி இலை என்று பெயராகும். இந்த இலை வாழை இலையைப் போன்றது. இந்த இலையில் உண்பது என்பது இரு நூறு ஆண்டுகள் தொடர்கின்ற பாரம்பரியம். கிட்டத்தட்ட 15 ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி இந்தப் பழக்கம் இத்தீவுக்கூட்டத்தில் நிலை பெற்று, நீடித்து வருகிறது.

இத்தீவில் வசிப்போரில் கணிசமானோர் பிஹார் மாநிலம் போஜ்புரி பேசுபவர்கள் மற்றவர்கள் தமிழர்கள்.

தங்களது மொழியை படிக்க முடியாவிட்டாலும் பேச்சு வழக்கில் போஜ்புரி, தமிழ் இரண்டும் இங்கு உண்டு. இருந்தாலும் இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

1847ஆம் ஆண்டிலிருந்து 1860ஆம் ஆண்டுகளுக்குள்ளாக பிஹாரிலிருந்தும், மதராஸிலிருந்தும் இவர்கள் படகுகளில், ஒப்பந்த தொழிலாளர்களாக 103 நாள்கள் பயணம் செய்து இத்தீவுக் கூட்டத்தை அடைந்தனர். கரும்பு வாழைத் தோட்டங்களில் பணிபுரிந்து, அங்கேயே பல தலைமுறைகளாக தங்கி விட்டனர்.

தற்போது அங்கு அதிபராக இருக்கும் கிறிஸ்டீன் கங்குலு தமிழர். பிரதமராக இருக்கும் கமலா போஜ்புரிக்காரர். தீபாவளி போன்ற விழாக்களை மறக்காமல் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்கள் தங்களது மத விழாக்கள், திருமணம் மற்றும் விருந்துகளில் மறக்காமல் சோஹாரி இலையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிகழ்வையொட்டித்தான் பிரதமர் மோடி 'இந்தியர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்தியா கலாசாரத்தின் மூலம் வாழ்கிறது' என்று குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் தலைநகரான போர்ட் ஆஃப் ஸ்பெயினைச் சேர்ந்த கலாசார ஆய்வாளர் டாக்டர் கவிதா ராம்சரண் ' சோஹாரி இலையில் உணவு பரிமாறுவது என்பது வெறும் விருந்தோம்பல் மட்டும் அல்ல. இது நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நமது கலாசாரம் எத்தகையது என்று நினைவுகூரும் ஒரு அறிவிப்பாகவும் இது அமைகிறது' என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் ' டிரினிடாட் டொபேகோ நாட்டில் தற்போது இந்திய தொழிலாளர் சமூகத்தின் ஐந்தாம் தலைமுறையினர் வசிக்கிறார்கள். அவர்கள் தங்களது எல்லா விழாக்களிலும் இந்த சோஹாரி இலை பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இதில் எந்த சமரசமும் அவர்களிடம் இல்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com