தோளில் ரெண்டு துண்டு எதுக்கு..?''
'கல்யாண பந்தியில் என் மனைவிக்கும் சேர்த்து இடம் பிடிக்கத்தான்..?''
'பேக்கரி வெச்சிக்கிறவரு மகள் வேண்டாமுன்னு சொன்னேன் கேட்டியா?''
'ஏன்டா என்னாச்சு...?''
'காலை வீட்டிலும், மதியம் டிபன் பாக்ஸிலும் ரொட்டி சிலைஸ்தான்.. ''
ரத்னம் மரகதம், கோவை.
'என்னது நைட் ஒரு மணிக்குதான் சாப்பாடு கேக்க வருவியா?''
'ஆமாம் தாயி... பிரண்ட்ஸ் நைட் ஷோவுக்கு புக் பண்ணியிருக்காங்க?''
இமாரா ஷான்ஸை, சென்னை.
'என்ன ரெண்டு முறை பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுறீங்க?''
'பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேருக்கு மொய் எழுதினேன்.. அதான்..''
'ஏங்க என்னிடம் உங்களுக்குப் பிடிச்சதும், பிடிக்காததும் என்ன?''
'பிடிச்சது நீ உப்புமா செய்யாம இருக்கிறது.. பிடிக்காதது என்னை உப்புமா செய்யுங்கன்னு சொல்றது...?''
பர்வின் யூனூஸ், சென்னை.
'என்ன சார்.. பார்சல் வாங்கிட்டு.. இங்கேயே சாப்பிடுறீங்க..?''
'நீங்க கொடுத்த சட்னி சாம்பார் பத்தாதுங்களே?''
அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'ஹோட்டல்காரர் வீட்டுல சாப்பிட்டேன்...''
'என்ன ஸ்பெஷல் மீல்ஸா...?''
'இல்லை... ஹோம்லி மீல்ஸ்...''
அ.ரியாஸ், சேலம்.
'ஹோட்டலுக்கு எப்போது கூப்பிட்டாலும் என் ஆளு வரமாட்டேங்குறடா...?''
'ஆமா மச்சி... நீ பில் அவளைக் கட்ட சொல்லிடுவியோன்னு பயம்தான்...''
'அந்த பிச்சைக்காரன் சரியான திமிர் பிடிச்சவன்...''
'ஏன் சார்.. அப்படி சொல்றீங்க?''
'ஒண்ணுமில்லை... போ சொன்னேன்.. அதுக்கு ஆஸ்பத்திரியில் கொட்டுவீங்க.. எங்களுக்கு ஒரு வாய் சோறு போட மாட்டீங்கன்னு சொல்றான்..''
'என்ன சர்வர் இது... காபியில் சர்க்கரை இல்லையே..?''
'சார்.. நீங்கள்தான் வெறும் காபி போதுமுன்னு சொன்னீங்களே...?''
'வெங்காயத் தோசை கொடுப்பா?''
'சார்... பெரிசா, சின்னதா...?''
'தோசை பெரிசு.. வெங்காயம் சின்னது...?''
வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.