படப்பிடிப்புகளின் சுவாரசியம்...

திரையுலகில் வெளிப்புறப் படப்பிடிப்புகள் மிக அவசியம். புதுப்புது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தி, மக்களைக் கவர்கின்றனர்.
படப்பிடிப்புகளின் சுவாரசியம்...
Published on
Updated on
3 min read

திரையுலகில் வெளிப்புறப் படப்பிடிப்புகள் மிக அவசியம். புதுப்புது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தி, மக்களைக் கவர்கின்றனர்.

திரைப்படங்களில் சில காட்சிகளை இயற்கையான சூழலில் படம் எடுக்கப் படக் குழுவினர் முன்கூட்டியே சென்று பார்த்து தேர்வு செய்து, அங்கு காதல் காட்சிகள் உள்பட பல காட்சிகளை படம் எடுக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவில் அடிக்கடி படப்பிடிப்புகள் நடைபெற்ற இடங்கள், அங்கு எடுக்கப்பட்ட சில படங்கள்.

ரோக்டாங் பாஸ், ஹிமாசல பிரதேசம்

பீர்பஞ்சல் பகுதியில் உள்ளது. அற்புதமான இயற்கை காட்சிகள்,பனி படர்ந்த மலைகள் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள்.. என எல்லாமே இங்கு அழகு.

'ஜப் வி மெட்' இங்கு படமாக்கப்பட்டது. 'புஷ்பா-2', 'தோஷ்தானா', 'தேவ்-டி', 'ஹைவே' உள்ளிட்ட படங்களின் சில காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.

இங்கு படப்பிடிப்புக்கு ஆபத்துகளும் உண்டு. சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறும். கடுமையான பனிப் பொழிவு ஏற்படும். பனிப் புயல் கூட வரலாம். அதன் உயரமே சிலருக்கு மூச்சுத் தினறல், பல அசெளகர்யங்களை ஏற்படுத்தலாம்.

பான்காங் டிசோ, லடாக்

சொர்க்கமான நிலபரப்பு. லே, ஸ்பிட்டி பள்ளத்தாக்கிலும் படப்பிடிப்பு நடக்கும். இங்கு பைக் ஓட்ட பலருக்கும் ஆசை வரும். 'ஜப் தக் ஹை ஜான்' படமும், 'த்ரி இடியட்ஸ்' படத்தின் கடைசிக் காட்சியும் இங்கு படமாக்கப்பட்டது.

தில்சே- ஷாருக்கான்-மணிஷா கொய்ராலா பாடிய காதல் காட்சி பாங்காக் ஏரியிலும், 'பாக் மில்கா பாக்' படம் இங்குள்ள நூப்ரா பள்ளத்தாக்கு சான்ட்டூன்சிலும், 'டியூப் லைட்' படத்தில் ஒரு பாடல் மூன் லேண்டிலும், 'பஜ்ரங்க் கீ பஜன்' படக் காட்சிகள் சோன்மார்க் பகுதியிலும், 'ஹைவே' படம் ஸ்பிட்டி பள்ளத்தாக்கிலும் படமாக்கப்பட்டன.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, கேரளா

திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடியில் உள்ள அத்திரபள்ளி கிராமத்தில் படம் எடுப்பதில் மணிரத்னம் மிக பிரபலம். 'ராவணன்' படத்தில் அத்திரபள்ளி நீர்வீழ்ச்சியை அழகாக, சரியான சமநிலை உணர்ச்சியுடன் படம் பிடித்து காட்டினார்.

முதன் முதலில் 'பொன்னபுரம் கோட்டா' என்ற படம் 1973-இல் இங்கு படமாக்கப்பட்டது. பிரேம்நசீர், விஜயஸ்ரீ உள்ளிட்டோர் நடித்த 'வல்லியூர் காவிலி' என்ற பாடல் மிக பிரபலம். 1976-இல் பிரேம்நசீர், மதுசாலா நடித்த 'வன தேவதா'வும், 1988-இல் மோகன்லால்-ஊர்வசி நடித்த 'அனுராகி' இங்கு படமாக்கப்பட்டன.

'இந்தியாவின் நயாகாரா' எனப் புகழப்படும் இந்த நீர்வீழ்ச்சியானது 'புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி' எனவும் புகழப்பட்டது. 'புன்னகை மன்னன்' படத்தில் கமல்-ரேகா சார்ந்த டூயிட்,தற்கொலை காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டன.

'பாகுபலி' படத்தின் ஆரம்பக் காட்சி இங்கு எடுக்கப்பட்டது. பிரபாஸ்-தமன்னாயின் காதல் படக் காட்சியும் இங்கு தான் படம் பிடிக்கப்பட்டது.

மணிரத்னம்-ஷாருகான்-ப்ரித்தி ஜிந்தாவின் 'தில் சே' படம் மிக அழகாகப் படமாக்கப் பட்டது. ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் நடித்த 'குரு' 2007-இல் இங்கு படமாக்கப்பட்டதோடு, ஐஸ்வர்யாராயின் 'பார்சோரே' பாடல்) படமாக்கப்பட்டதும் இங்கு தான்.

உதய்பூர் சிட்டி பேலஸ்

இந்த அரண்மனை ராஜஸ்தானின் உதய்பூர் பிச்சோவா ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. கட்டடம் பளிங்கு, கிரானைட் கற்களால் ஆனது. இங்கு எடுக்கப்பட்ட முதல் படம் 1965-இல் வெளிவந்த 'கைடு'. அடுத்து 'மேராசா' படத்தின் பல பாடல்கள் இங்கு எடுக்கப் பட்டன. ஜேம்ஸ் பாண்டின் 'ஆக்டோபஸ்' படம் இங்கு எடுக்கப் பட்டது.

1991-இல் ரஜினிகாந்த்-ரேகா நடித்த புல்பேன் 'அங்கரே' என்ற படத்தின் பல காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டன.

2002-இல் ஹிருத்திக் ரோஷன், கரீனா கபூர் நடித்த பாடல் படமாக்கப்பட்டது.

சஞ்சய் தத் நடித்த,'ஏக் லவ்யா', 'தமால்' படங்கள் இங்கு எடுக்கப்பட்டன. 'ஸ்லம்டாக் மில்லியனர்' படப்புகழ் தேவ் படேல் நடித்த 'மேரி கோல்டு ஹோட்டல்' இங்கு எடுக்கப்பட்டது. இதுவரை இங்கு 12 படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் படங்களின் சில காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன.

டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே இந்த ரயிலை பயன்படுத்தி ஏராளமான படங்கள் வந்துள்ளன. இந்த ரயில், யுனெஸ்கோ பாரம்பரிய இடமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

பணாரஸ் குளியல் கட்டங்கள்

வாரணாசி சென்றவர்கள் கங்கையில் பல படிக் கட்டங்கள் வழியாக இறங்கி குளிப்பர். 64 கட்டடங்கள் இருந்தாலும் தஷ்வமேத காட், அசி காட், மணிகர்ணிகா காட், ஹரிசந்த்ரா காட், ஹனுமான் காட், கோலா காட், ராஜ்காட்,நந்தேஸ்வர் காட் உள்ளிட்டவை பிரபலம்.

அலியா பட்-ரன்பீர் கபூர் நடித்த 'ரான் ஜான்சா' படத்தின் ஒரு பாடல் அசிகாட்டில் படமாக்கப்பட்டது. 'மாசான்' என்ற படத்தில் பல குளியல் காட்சிகளும், மயானபூமியான ஹரிச்சந்திரன் காட்டும் இடம்பெற்றன. 'போலா' என்ற படத்தில் வாரணாசியில் ஓடும் கங்கையில் பயணம் காட்டப் பட்டது.

ரிஷிகபூர்-தபசி பன்னு நடித்த 'முல்க்' , அக்சய் குமார் 'ஜாலி எல். எல்.பி-2' உள்ளிட்ட படங்களும், 'பாரதி', 'கலகலப்பு 2' உள்ளிட்ட தமிழ்ப் படங்களின் படபிடிப்புகளும் வாராணசியில் நடைபெற்றுள்ளன.

மூணாறு, கேரளா

மூணாறு பொன்முடி அணை, சுற்றியுள்ள மலைகள், பசுமை, வீயூ பாயிண்ட், தொங்கு பாலம், நீர்வீழ்ச்சி, யானை சபாரி உள்ளிட்டவை படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்கள்.

'சென்னை எக்ஸ்பிரஸ்', 'மைனா', 'புதுப்பேட்டை', 'ஆடுகளம்', 'கும்கி', 'விசாரணை', விடுதலை உள்ளிட்ட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் இங்குதான் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com