சிரி... சிரி...
டயம்தானே வாங்கச் சொன்னேன்.. வாளும் எதற்கு வாங்கினீர் அமைச்சரே...?'காம்போ ஆஃபரில் விலை குறைவாக கிடைத்தது அரசரே..?'
'என்ன வெதர்மேன்.. முக்கிய தகவலைக் கொண்டு வந்தீரா..?'அரசரே... நாட்டை போர்மேகம் சூழ்ந்துவிட்ட செய்தியைச் சொல்ல வந்தேன்...'
'ஒவ்வொரு முதுகுப்புண் தழும்பு அருகிலும் அரசர் என்ன டாட்டூ போட்டிருக்கிறார்...?'அது ஏற்பட்ட தேதியும், விவரமும்...?'
'போர்க்களத்தில் அனைவரும் ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்...'சரிங்க அரசரே... நீங்க '1, 2,3..' சொன்னவுடன் ஓடுறோம்...'
-அ.ரியாஸ், சேலம்
'பூ போட்ட பாதையில் நடந்து போனது தப்பா போச்சே...?'ஏன் அரசே...?'பாதை நேரா மயானத்துக்குப் போயிடுச்சி...?'
-எம்.பி.தினேஷ், கோவை.
'போருக்குத் தயாருன்னு எதிரிக்கு ஓலை அனுப்பி விடுங்க அமைச்சரே...?'அரசே.. எப்படி சமாளிப்பது...?'ஓலையைப் பார்த்தவுடன் எதிரி ஆச்சரியத்தில் அப்படியே மயக்கம் போட்டுவிடுவான் அமைச்சரே...?'
'அரசர் பயங்கரமான முன்னெச்சரிக்கை பேர்வழி..?'எதனால்...?'போர் ஓலை வந்தவுடன் அந்தப்புறப் பெண்களைப் பதுங்குக்குழிக்கு அனுப்பிவிட்டாரே...?'
'ஏற்றமும் மாற்றமும் வரும் என்று அரண்மனை ஜோதிடர் சொன்னாரே...? ஆனால் ரெண்டுமே இணைந்து வந்திருக்கே..?'எப்படி அரசரே...?'ஏமாற்றம்..'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.