பேல் பூரி

'பாரதப்பள்ளி, ஞானம், கற்றுவா, தினைவிளை, எள்ளுவிளை, கொள்ளு விளை, புல்லுவிளை, அருகுவிளை, பழவிளை, மாவிளை, பலாவிளை, பனைவிளை, இலந்தையடிவிளை, முருங்கைவிளை, இஞ்சிவிளை, சேனைவிளை, சுக்குப்பாறை, தேரிவிளை, செம்பருத்திவிளை.'
பேல் பூரி
Published on
Updated on
2 min read

கண்டது

(தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊரின் பெயர்)

'காகிதபட்டறை'

-வீர.செல்வம், பந்தநல்லூர்.

(பெரம்பலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஊரின் பெயர்)

'மீன்துள்ளி'

(கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சில ஊர்களின் பெயர்கள்)

'பாரதப்பள்ளி, ஞானம், கற்றுவா, தினைவிளை, எள்ளுவிளை, கொள்ளு விளை, புல்லுவிளை, அருகுவிளை, பழவிளை, மாவிளை, பலாவிளை, பனைவிளை, இலந்தையடிவிளை, முருங்கைவிளை, இஞ்சிவிளை, சேனைவிளை, சுக்குப்பாறை, தேரிவிளை, செம்பருத்திவிளை.'

-உ.இராமநாதன், நாகர்கோவில்.

(திருவாரூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'சவளக்காரன்'

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

கேட்டது

(தருமபுரி அருகே கிராமப் பேருந்து நிறுத்தத்தில் இரு பெண்கள்)

'பஸ் வரும்போது நீங்க கைகாட்டி நிறுத்தாம பக்கத்துல இருக்கிற அந்தப் பெண்ணை நிறுத்தச் சொல்றியே ஏன்?'

'டிரைவர் என் கணவர்தான். நான் கைகாட்டினால் நிறுத்தாமல் போயிடுவார்.. அதான்..'

-மு.மதிவாணன், அரூர்.

(சென்னை மாநகரப் பேருந்தில் தம்பதி..)

'என்னங்க.. இன்னிக்கு காக்காய்க்கு சாப்பாடு வைக்காமல் வந்துட்டேன்...'

'பரவாயில்லை. விடு.. இன்னிக்காவது வேற எங்காவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்...'

-பர்வீன் யூனுஸ், சென்னை.

(திருச்சி நடைபயிற்சியில் தம்பதி பேசியது)

'வாக்கிங் போகும்போது சும்மா தொண - தொணன்னு பேசிட்டு வராதே..?'

'என்ன பண்றதுங்க? வூட்டுல உங்கம்மா முன்னடி பேச முடியலியே?'

'சரி.. சரி.. கொஞ்சமா.. பேசிட்டு வா..?'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

வெற்றி பெற்றவனுக்கு பொறுப்பு கூடுகிறது. தோல்வி அடைந்தவனுக்கு அனுபவம் கூடுகிறது.

-வசீகரன், தேனாம்பேட்டை.

மைக்ரோ கதை

குப்பை மேட்டை கோழி கிளறிக் கொண்டிருக்கிறது. அப்போது ஒரு ரத்தினக்கல் தென்பட்டு. அதை ஒதுக்கிவிட்டு குப்பையை கோழி கிளறியபோது, ரத்தினம் சிரித்தது.

'ஏன் சிரிக்கிறாய்' என்றது கோழி. 'பின்னே சிரிக்காமல் என்ன செய்வது. நான் எத்தனை விலை உயர்ந்தவன் தெரியுமா? நீ ஏன் புறக்கணிக்கிறாய்' என்றது ரத்தினம்.

'யார், யார் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருந்தால்தான் மதிப்பு. உன்னால் என் பசியைப் போக்க முடியுமா? அங்கே பூனையும், கழுதையும் வருகிறது. அவற்றின் பசியைப் போக்க முடியுமா? கோடி ரூபாய் மதிப்புள்ள உன்னைவிட கடுகு அளவு உள்ள தானியமே எனக்குப் பெரிது' என்று சொல்லிவிட்டு, கோழி தானியத்தைக் கொரிக்கத் தொடங்கியது.

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்.எம்.எஸ்.

அனைத்தையும் ஏற்கும் பக்குவம் வந்துவிட்டால் துயரங்கள் தூர செல்லும்.

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

அப்படீங்களா!

தேடல் சேவையுடன் முதலில் தொடங்கப்பட்ட கூகுள், பின்னர் இ-மெயில், போட்டோஸ், பிளே ஸ்டோர் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது.

இதில், புகைப்படங்களுக்காக பிரத்யேகமாக 'கூகுள் போட்டோஸ்' தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதைக் கொண்டாடும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பயன்பாட்டுடன் பல்வேறு புதிய சேவைகளை கூகுள் அறிவித்துள்ளது. 150 கோடி பேர் 9 ஆயிரம் கோடி போட்டோக்கள், விடியோக்களை இதில் சேமித்துள்ளனர். ஏ.ஐ. உதவியுடன் புகைப்படங்களை அழகுப்படுத்தும் சேவை படிப்படியாக ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகமாகிறது.

போட்டோ ஆல்பங்களை எளிதில் பகிர 'க்யூ.ஆர். கோட்' சேவை அறிமுகமாகி உள்ளது. புகைப்படங்கள் எந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது என்ற இடத்தின் அடிப்படையில் படங்களை ஒருங்கிணைக்கும் 'பிளேசஸ்' சேவை அறிமுகமாகிஉள்ளது. புகைப்படங்களில் அணிந்திருக்கும் சட்டையின் நிறத்தை வைத்தோ, எந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை வைத்தோ தேடலாம். புகைப்படத்தில் உள்ள நமது உறவினர்கள், நண்பர்கள், செல்லப்பிராணிகளை முன்னிலைப்படுத்தி புகைப்படங்களைப் பகிரலாம்.

பழைய நினைவுகளைத் தூண்டும் புகைப்படங்களை தேவையில்லை என்று கருதினால் அந்தப் புகைப்படங்களை மறைத்து வைக்கவும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது.

ஏற்கெனவே 'கிளவுட்' பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் அறிதிறன்பேசியில் இருந்தால் அதை அழிக்கும் புதிய சேவையும் அறிமுகமாகி உள்ளது. இதற்காக கூகுள் போட்டோஸில் உள்ள உங்கள் புரோபைல் புகைப்படத்தை தேர்வு செய்து 'ஃபிரி அப் ஸ்பேஸ்' என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com