நிலநடுக்கங்களின்போது, வீடுகளைப் பாதுகாக்க 'லெவிட்டேஷன்' தொழில்நுட்பத்தை ஜப்பான் உருவாக்கியுள்ளது.
பேரிடர்களின்போது வீடுகள் பழைய நிலைக்கு சேதம் இல்லாமல் மீளும் தன்மை கொண்ட வீடுகளை உருவாக்கும் புரட்சிகரமான தொழில்நுட்பப் பாய்ச்சலில் ஜப்பான் முன்னேறியுள்ளது.
முக்கியமாக, நிலநடுக்கங்களின்போது வீடுகள் தரை மட்டத்திலிருந்து சற்றே மேலே உயர அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை ஜப்பான் முதல் முதலாக அறிமுகம் செய்தது. 'ஏர்டான்ஷின்' என்ற ஜப்பானிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது வீடுகளை அஸ்திவாரத்திலிருந்து சிறிது உயர்த்த, அழுத்தப்பட்ட காற்றைப் பயன்படுத்துகிறது.
நிலநடுக்கம் உணரப்பட்ட அரை விநாடிக்குள், கட்டமைப்பின் கீழ் உள்ள ராட்சஷ காற்றுப் பைகள் விரிந்து, முழு வீட்டையும் அஸ்திவாரத்திலிருந்து சுமார் 3 செ.மீ. உயர்த்துகின்றன. நடுங்கும் பூமியுடன் நேரடி தாக்கத்தைத் தடுக்க, இந்த சிறிய இடைவெளியே போதுமானது. வீடு சேதம் அடையும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது.
நில நடுக்கம் தணிந்தவுடன், வீடு மெதுவாக பழைய நிலையில் அமருகிறது. வீடு அஸ்திவாரத்திலிருந்து விடுபட்டு, அந்தரத்தில் நிற்கும்போது வீட்டுக்குள் அவசரகால மாற்று மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனால் அஸ்திவாரத்திலிருந்து வீடு விடுபடும்போது வீடு இருளில் மூழ்காது.
சக்தி வாய்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்பட்டபோது, 'லெவிட்டேஷன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய வீடுகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை, அதேசமயம், பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட கான்கிரீட் கட்டடங்கள் பல சேதத்துக்கு உள்ளாயின . சர்வதேச அளவில் 'லெவிட்டேஷன்' தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் ஆர்வம் அதிகரித்துவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.